விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    காடுகள் ஊடு போய்க்*  கன்றுகள் மேய்த்து மறியோடிக்*  கார்க்கோடற்பூச்- 
    சூடி வருகின்ற தாமோதரா!*  கற்றுத் தூளி காண் உன் உடம்பு*
    பேடை மயிற் சாயற் பின்னை மணாளா!*  நீராட்டு அமைத்து வைத்தேன்* 
    ஆடி அமுதுசெய் அப்பனும் உண்டிலன்*  உன்னோடு உடனே உண்பான்*

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மறி ஓடி - (அவற்றை) மறிக்கைக்காக [திருப்புகைக்காக] முன்னே ஓடி;
கன்றுகள் மேய்த்து - (அக்) கன்றுகளை மேய்த்து;
சார் கோடல் பூ சூடி - பெரிய கோடல் பூக்களை முடியிலணிந்துகொண்டு;
வருகின்ற - (மீண்டு) வருகின்ற;
தாமோதர் - கண்ணபிரானே;

விளக்க உரை

கண்ணபிரானே! நீ கன்று மேய்க்கக் காட்டிடைப் புகுந்து மேய்க்கும்போது அவை அங்குமிங்கும் சிதறி ஓட, அப்படி அவ்ற்றை ஓட விடாமல் அவற்றின் முன்னே ஓடித் திருப்பி இவ்வாறு கஷ்டங்கள் பட்டுக் கன்றுகளை மேய்த்துவிட்டு வரும்போது உன் உடம்பெல்லாம் புழுதி படிந்து கிடக்கின்றது; இந்த மாசு தீரும்படி உன்னை நீராட்டுவதற்காக எண்ணெய் புளிப்பழம் முதலிய ஸாமக்ரிகளச் சேமித்துவைத்திருக்கின்றேன்; நீ வந்த பிறகு உன்னுடனே உண்ணவேணுமென்று உன் தகப்பனாரும் இதுவரை உண்ணாமல் காத்திருக்கின்றார்; ஆகையால் சடக்கென நீராடி அமுது செய்யவா என்றழைக்கின்றாள். கோடல் பூ-காந்தள் பூ; கார்-பெருமைக்கும் பேர்.

English Translation

O Damodara! Entering the deep forest, driving the calves and running before them, you return wearing dark glory-lily flowers. See, your body is covered with the dust raised by the calves. O Bridegroom of Nappinnai who charms you like a peacock female! I have made ready for your bath, Bathe and come for supper. Your father has not eaten, he wants to eat with you.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்