விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    சீலைக் குதம்பை ஒருகாது*  ஒருகாது செந்நிற மேற் தோன்றிப்பூ* 
    கோலப் பணைக் கச்சும் கூறை- உடையும்*  குளிர் முத்தின் கோடாலமும்*
    காலிப் பின்னே வருகின்ற*  கடல்வண்ணன் வேடத்தை வந்து காணீர்* 
    ஞாலத்துப் புத்திரனைப் பெற்றார்*  நங்கைமீர்! நானே மற்று ஆரும் இல்லை  (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நங்கைமீர் - பெண்காள்;
ஒரு காது - ஒரு காதிலே;
சீலைக்குதம்பை - சீலைத்தக்கையையும்;
ஒரு காது - மற்றொரு காதிலே;
செம் நிறம் மேல்தோன்றிப் பூ - செங்காந்தள் பூவையும் (அணிந்துகொண்டு);

விளக்க உரை

சீலைக்குதம்பை= ‘போய்ப்பாடுடைய நின்’’ என்ர திருமொழியில் யசோதைப்பிராட்டி கண்ணபிரானை வேண்டியழைத்துக் காதிலிட்ட துணித்திரி. “திரியை யெரியாமே காதுக்கிடுவன்” என்று சொல்லி இட்டாளன்றோ.-இரண்டு காதுகளிலும் அத்திரியை இவள் இட்டனுப்ப, அவன் காட்டிலே ஒருகாதில் திரியைக் களைந்திட்டுச் செங்காந்தள்பூவை அணிந்து கொண்டுவந்தமை அறிக. உடை என்று வஸ்திரத்திற்கும் அதனை உடுத்துதற்கும்பேர். இங்கு இரண்டாவதான தொழிற்பெயரைக் கொள்க. ஆலம்-’ஹாரம்’ என்ற வடசொல் ஆரமெனத் திரிந்து ரகரத்திற்கும் லகரம் போலியாக வந்தது: அன்றிக்கே, ‘கோடாரமும்’ என்றே பாடமாகவுமாம்; அன்றிக்கே, ‘கோடாலம்’ என்றொரு முழுசொல்லாய் முத்துப்பணியைச் சொல்லிற்றாகவுமாமென்பர்-திருவாய்மொழிப்பிள்ளை. வேடம்-வேஷம். பெண்காள்! கச்சுங் கூறையுமாரமுமாக என் கண்ணபிரான் கன்றுமேய்த்து மீண்டு வருகின்ற கோலத்தை வந்து காண்மின்; பிள்ளை என்றால் இவனொருத்தனேயொழிய மற்றைப்பிள்ளைகள் அணிற்பிள்ளை கீரிப்பிள்ளை தென்னம்பிள்ளையேயாமத்தனை; அவற்றைப்பெற்ற தாய்களோடு மலடிகளோடு ஒருவாசியில்லை; ‘புத்ரவதீ’ என்று எனக் கொருத்திக்கே யன்றோ பட்டங்கட்டத்தகும் என்று புகழ்ந்து மகிழ்ந்து பொலிகின்றாள்.

English Translation

With the tucks of his turban covering one ear and a bunch of red glory-lily flowers stuck over the other, wearing a beautiful vesture and a waist cloth over it, hanging a crescent of cool pearls on his chest, the ocean-hued Lord returns with the calves. O Ladies, come

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்