விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பலதேவர்ஏத்த*  படிகடந்தான் பாதம்*  
    மலர்ஏற இட்டுஇறைஞ்சி*  வாழ்த்த வலர்ஆகில்*
    மார்க்கண்டன் கண்ட வகையே*  வரும்கண்டீர்* 
    நீர்க்கண்டன் கண்ட நிலை.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பாதம் - திருவடிகளிலே
மலர் - புஷ்பங்களை
ஏற இட்டு - ஸமர்ப்பித்து
இறைஞ்சி - வணங்கி
வாழ்த்த வலர் ஆகில் - மங்களாசாஸநம் பண்ண வல்லவர்களானால்,

விளக்க உரை

சில புராணங்களில் மேலெழுந்த வாரியாகப் பார்க்கும்போது பரமசிவனே மார்க்கண்டேயனுக்கு அபயமளித்த்தாகக் காணப்படினும் மஹாபாரத்தில் ஆரண்யபர்வத்தில் நூற்றுத் தொண்ணூற்றிரண்டா மத்யாயத்தில் மார்க்கண்டேயன் தானே தருமபுத்திரரை நோக்கிச் சொல்லுமளவில் ஸ்ரீமந்நாராயணனுடைய வார்த்தைகளை அநுவதிக்குமிடத்து “***“ என்றுள்ள ச்லோகத்தினால் இவன் ஸ்ரீமந்நாராயணனைச் சரணம் புகுந்தவனென்பது நன்கு விளங்கும். ஸ்ரீபாகவதத்திலும் பன்னிரண்டாம் ஸ்கந்தத்தில் எட்டாமத்யாயத்தில் – “***“ (கக) என்றது காண்க. மார்க்கண்டேயனுடைய வரலாறு இப்படிப்பட்டதென்று தெரிந்தபின் இனி இப்பாசுரத்தின் கருத்தை ஆராய்மின் – “உலகளந்த பெருமானுடைய திருவடிகளில் புஷ்பங்களைப் பணிமாறிப் பல்லாண்டு பாட வல்லரானால் நீற்கண்டன் கண்டநிலை மாற்கண்டன் கண்ட வகையே வருங்கண்டீர்“ என்றால் இதற்குக் கருத்து யாதெனில், கேண்மின். மார்க்கண்டேயன் பரமசிவனிடத்தில் (ஸ்ரீவைகுண்ட ப்ராப்தியாகிற) மோக்ஷத்தை விரும்பிப் பணிந்தானல்லன், வாழ்நாளையே விரும்பிப்பணிந்தான், அந்தப் பலனையும் அளிக்க யோக்யதையற்றவனாய் அந்த ருத்ரன் ஸ்ரீமந்நாராயணன் பக்கலில் அவனை ஆச்ரயிப்பது அப்பெருமான் மூலமாக ரக்ஷணம் செய்வித்தான், ஆகவே, “தேவதாந்தரங்கள் பரம்பரயாக ஒருகால் ரக்ஷகங்களாகுமேயன்றி ஸாக்ஷத்தாக ரக்ஷகங்களாக மாட்டா, ஸ்ரீமந்நாராயணனொருவனே ஸாகஷாத் ரக்ஷகனாவான்“ என்று மார்க்கண்டேயன் கைகண்டறிந்த பரமார்த்தம் தேறினதாகும் என்கை. நேராக எம்பெருமானையே நீங்கள் ஆராதிக்கும் பக்ஷத்தில் மார்கண்டேயன் ச்ரம்பட்டுத் தெரிந்துவிட்டதாகத் தேறும் என்றவாறு நீண்டகண்டனாகிய சிவனிடத்துக் காணக் கூடிய நிலைமை (அதாவது-இவன் ஒன்றுக்கும் உதவாதவன் என்று தெரிந்துகொள்ளக்கூடிய ஸ்திதி), அதை மார்க்கண்டேயன் பண்டு தெரிந்துகொண்டான், நீங்களும் அதை இப்போது தெரிந்து கொண்டீர்களென்னலாம் – ஸாகஷாத்தாக் நீங்கள் எம்பெருமானையே ஆராதிப்பீர்களாகில், என விரிக்க.

English Translation

If you wish to learn the truth, follow the sure path of Markandeya, who worshipped with flowers and praise the Earth-straddling feet of the Lord praise by the gods.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்