விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    இலைதுணை மற்றுஎன்நெஞ்சே*  ஈசனை வென்ற* 
    சிலைகொண்ட செங்கண்மால் சேரா*  குலைகொண்ட
    ஈர்ஐந்தலையான்*  இலங்கையை ஈடுஅழித்த* 
    கூர்அம்பன் அல்லால் குறை.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

இலங்கையை - லங்காபுரியை
ஈடு அழித்த - சீர்கெடுத்த
கூர் அம்பன் அல்லால் - கூர்மைதாங்கிய அம்புகளையுடையவனான இராமபிரானைத் தவிர்த்து
குறை - விரும்பத்தகுந்த
மற்ற துணை - வேறொரு துணைவன்

விளக்க உரை

விரோதி நிரஸநமே இயற்கையாகவுள்ள எம்பெருமானைத் தவிர்த்து வேறொருவரும் துணையாகவல்லாரில்லையென்று தம் திருவுள்ளத்துக்கு உபதேசிக்கிறாரிதில். ஈசனைவென்ற சிலைகொண்ட செங்கண்மால் – ஒரு ஸமயத்தில் ஸ்ரீ மஹாவிஷ்ணு ருத்ரனை ஒரு சிலையால் வென்றான், அந்த வில் பரசுராமனிடத்தில் வந்து சேர்ந்திருந்தது; அதனை ஸ்ரீராமவதாரத்தில் மிதிலையில் நின்று மீண்டெழுந்தருளும்போது அப்பரசுராமனிடத்திற் கொண்டான், (இவ்வரலாற்றை விரித்துரைப்போம்) முன்னொரு காலத்தில் தேவசில்பியான விச்வகர்மாவினால் நிருமிக்கப்பட்ட சிறந்த இரண்டு விற்களும் ஒன்றைச் சிவபிரானும் மற்றொன்றைத் திருமாலும் எடுத்துக் கொண்டார்கள். பின்பு ஒரு காலத்தில் அவ்விற்களுள் சிறந்தது இன்னதென்பதை அறிய விரும்பிய தேவர்களின் வேண்டுகோளால் பிரமன் அரனுக்கும் அரிக்கும் போரை மூட்டிவிட, அங்ஙனமே அவர்கள் அவ்விற்களைக்கொண்டு போர்புரிகையில் சிவபிரானது வில் சிறிது முறிபட்டது, அவ்வாறு இற்றவில்லைச் சிவபிரான் ஜநககுலத்துத் தேவராதனென்னும் அரசனிடம் கொடுத்திட, அது வம்ச பரம்பரையாம் ஜநகமஹாராஜனளவும் வந்தது, இது நிற்க, இறாத வலிய வில்லை விஷ்ணு ரிசீகமுனிவனிடம் கொடுத்துச்செல்ல, அது அவன் குமாரனான ஜமதக்நியினிடத்தும் அவன் குமாரனான பரசுராமனிடத்தும் பரம்பரையாய் வந்தது. முற்கூறிய சிவதநுஸ்ஸை ஸீதைக்குக் கந்யாசுல்கமாக ஜநகன் வைத்திருந்தான், இராமபிரான் அந்த வில்லை முறித்துத் தன் பேராற்றலை விளங்கச்செய்து பிராட்டியை மணந்துகொண்டு மிதிலாபுரியினின்றும் புறப்பட்டு அயோத்திக்கு வரும்போது வழியிடையே செருக்கிவந்த பரசுராமனது கையிலிருந்த விஷ்ணுதநுஸ்ஸை வாங்கி எளிதில் வளைத்து நாணேற்றிக் கணைதொடுத்து “இவ்வம்புக்கு இலக்குஎன்?“ என்று வினாவ, பரசுராமன் அதற்கு இலக்காகத் தனத்து தபோபலம் முழுவதையுங் கொடுக்க, அவன் க்ஷத்ரியை வம்சத்தைக் கருவறுத்தவனாயிருந்தாலும் வேதவித்தும் தவவிரதம் பூண்டவனுமாயிருத்தல் பற்றி அவனைக் கொல்லாமல் அவனது தவத்தைக் கவர்ந்த மாத்திரத்தோடு ஸ்ரீராமன் விட்டருளினன் என்ற வரலாறுகள் இதிஹாஸப்ரஸித்தம். ஆகவே, இப்பாட்டில் “ஈசனை வென்ற சிலை“ என்றது பரசுராமன் கையிலிருந்த விஷ்ணுதநுஸ்ஸை. அதனைக் கொண்ட செங்கண்மால் – ஸ்ரீராமபிரான். அப்படிப்பட்ட தன்னை யடிபணிந்து வாழமாட்டாத இராவணனைக் குடும்பத்தோடு கொன்றொழித்த எம்பெருமானைத் தவிர்த்து நமக்குத் துணையாகவல்லார் ஆருமில்லை என்றாராயிற்று.

English Translation

O Heart! The red-eyed adorable lord Rama took the vishnu-bow from Parasurama, killed the unrelenting fen-headed king and razed the city of Lanka with his fire-arrows. Other than him, we have not constant companion.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்