விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அறியார் சமணர்*  அயர்த்தார் பவுத்தர்* 
    சிறியார் சிவப்பட்டார்செப்பில்* 
    வெறியாய மாயவனை மாலவனை*  மாதவனை ஏத்தாதார்* 
    ஈனவரே ஆதலால் இன்று. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

சமணர் - ஜைநர்கள்
அறியார் - உண்மையை அறிய மாட்டார்கள்
பவுத்தர - பௌத்தர்கள்
அயர்த்தார் - பிரமித்தார்கள்
சிவப்பட்டார் - சைவமதஸ்தர்கள்

விளக்க உரை

இப்படிப்பட்ட பரம்பொருளை எல்லாரும் பணிந்து உய்வுபெறலாமாயிருக்க, பலபல பாவிகள் விவேகமற்று விமுகரா யொழிகின்றனரேயென்று திருவுள்ளம் நொந்து பெசும் பாசுரம் இது. “தற்கச் சமணரும் சாக்கியப் பேய்களும் தாழ்சடையோன் சொல்கற்ற சோம்பரும்“ என்கிறபடியே உள்ள மதாந்த ரஸ்தர்ள் பாழே போனார்களே! என்று வயிறெரிகிறார். சமணர் அறியார் – “***“ இத்யாதியான ஸப்தபங்கியை அங்கீகரித்துக்கொண்டு ஸமஸ்த ஜகத்தும் ஸத்துமாய் அஸத்துமாய் ஏகமுமாய் அநேகமுமாய்க்கொண்டு அநேகாந்தமாயிருக்குமென்று ஒன்றோடொன்று பொருந்தாமல் தோற்றினதைச் சொல்லுகிற ஜைநர் அவிவேகிகளா யொழிந்தனர். பவுந்தர் அயர்த்தார் – ஜ்ஞாதா, ஜ்ஞேயம் என்கிற பதார்த் தங்களெல்லாம் க்ஷணிகமென்றும் ஸ்திரனாயிருப்பானொரு ஆத்மா இல்லையென்றும், க்ஷணிகஜ்ஞாநஸந்த்தியே ஆத்மாவென்றும் பேய்க்கத்துக் கத்துகிற பௌத்தர்கள் பிரமாணகதியை மறந் தொழிந்தனர். சிவப்பட்டார் சிறியார் – படைக்கப்படும் பொருள்களில் ஒருவனாய் அநீச்வரனான ருத்ரனைப் பரதெய்வமாக உபபாதிக்கிற சைவ மத நிஷ்டர்கள் நீசராகி யொழிந்தனர். இப்படி தனித்தனியே பிரித்துச் சொல்லுவானேன்? இவர்களெல்லாரும் திருமாலை ஏத்தமாட்டாத பாவிகளாதலால் அனைவருமே நீசர் என்று கொள்ளவேணு மென்கிறார் பின்னடிகளில். 1. “ஆன்விடையேழன் றடர்த்தாற்கு ஆளானாரல்லாதார், மானிடவரல்லரென்று என் மனத்தே வைத்தேனே“ என்பதெ மாஞானிகளின் ஸித்தாந்த மாதலால் ஸ்ரீமந்நாராயணனிடத்தில் விமுகரா யொழிந்தவர்களெல்லாரும் மண்ணின் பாரமே என்றாயிற்று.

English Translation

The Sramanas are ignorant, the Bauddhas are confued, the Saivas are small-minded. So all those who do not praise the Adorable wonder-Lord Madava pale into insignificance once today.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்