விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஆறு சடைக்கரந்தான்*  அண்டர்கோன் தன்னோடும்* 
    கூறுஉடையன் என்பதுவும்*  கொள்கைத்தே*  வேறுஒருவர்
    இல்லாமை*  நின்றானை எம்மானை*  எப்பொருட்கும் 
    சொல்லானைச் சொன்னேன்*  தொகுத்து. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஆறு - கங்காநதியை
சடை - தனது ஜடா மண்டலத்திலே
கரந்தான் - மறையச்செய்து தாங்கிக்கொண்டிருக்கின்ற ருத்ரன்
அண்டர் கொன் தன்னோடும் - தெவாதிதெவனான ஸர்வேச்வானோடு
கூறு உடையன் என்பதுவும் - ஸாம்யமுடையவன் என்று (பாமரர்) சொல்லுஞ்

விளக்க உரை

ருத்ரனும் ஸ்ரீமந்நாராயணனைப் போலவே பரதேவதை“ என்று சிலர் மயங்கிக்கிடக்கிறார்களே, இப்படியும் ஒரு ப்ரமம் இருக்குமோ? தேவாதி தேவனான எம்பெருமான் எங்கே? அவனுடைய ஸ்ரீபாத தீர்த்தத்தை சிரஸாவஹித்துத் தூய்மை பெற்ற சிவன் எங்கே? இவ்விருவரையும் ஸமமாகச் சில அவிவேகிகள் சொன்னால் இதனை அறிவுடையார் அங்கீகரிக்கக் கூடுமோ வென்கிறார் முன்னடிகளில். கங்கை சிவனுடைய சடையில் மறைந்திருப்பதுபற்றி அவனுக்கு ஆறுசடைக் கரந்தான் என்று பெயரிடப்பட்டது. கரத்தல் – மறைத்தல். சிவனுக்குப் பல பெயர்களிருக்க இங்கு இந்தப் பெயரையிட்டுச் சொன்னது – கருத்துடன் கூடியது, எந்த ஸ்ரீமந்நாராயணனுடைய ஸ்ரீபாததீர்த்தத்தை ருத்ரன் சிரஸாவஹித்துப் புனிதனாயின்னோ, அந்த ருத்ரனை ஸமனாகச் சொல்வது பொருந்தாதென்பதைக் காட்டினபடி “***“ என்ற ஸ்தொத்ரரத்ந ஸ்ரீஸூக்தியும் நோக்கத்தக்கது. அண்டர்கோன் – “அண்டர்“ என்று தேவர்க்கும் இடையர்க்கும் பெயர், தேவாதிதேவன் என்றாவது கோபால க்ருஷ்ணன் என்றாவது பொருள் கொள்ளலாம். கூறு உடையன் – ஈச்வரத் வத்தில் பங்கு உடையவன் என்றபடி. கொள்கைத்தே? – கொள்ளுந் தன்மையுடையதோ? அங்கீகரிக்கத் தகாதது என்கை. இப்படி அத்விதீய ஸர்வேச்வானான அப்பரமபுருஷனை வாய்கொண்டு பேசுவது ஒருவர்க்கும் இயலாதாயினும் “அவனொருவனே பரதெய்வனம்“ என்கிற இவ்வர்த்தத்தை நான் சுருங்கச் சொன்னே னென்கிறார் பின்னடிகளில். 1. “***“ அஹம் க்ருத்ஸ்நஸ்ய ஜகத ப்ரபவ ப்ரளயஸ்ததா – மத்த பரதரம் நாந்யத் கிஞ்சிதஸ்தி தநஞ்ஜய.“ (அர்ஜுநா! எனக்கு மேற்பட்டத்த்துவம் எதுவுமல்லை) என்ற பகவத்வசநத்தையுட்கொண்டு ‘வேறொருவரில்லாமை நின்றானை‘ என்றார். எப்பொருட்கும் சொல்லுவதொன்றுண்டு, அதாவது – உலகத்தில் பிரயோகிக்கப்படும் ஸகல சப்தங்களும் ஸர்வாந்தர்யாமித்வேந ஸர்வசரீரியாயிருக்கின்ற பரமாத்மாவரையில் வாசகங்களாகும் என்பது, அந்த சக்தியாலே எப்பொருமாளுக்கு வாசகமான சொல்லும் எம்பெருமானைத் தொட்டுத் தீருமாதலால் ‘எப்பொருட்கும் சொல்லானை‘ என்கிறார்.

English Translation

In fact the mat-haried Siva and the egg-lord Brahma occupy portions of the lord's body. He stands, alone without a peer or superior. He is my master, He is all that is spoken of, I sing. His praise.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்