விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஆய்ந்த அருமறையோன்*  நான்முகத்தோன் நன்குறங்கில்
    வாய்ந்த குழவியாய் வாள்அரக்கன்,* - ஏய்ந்த
    முடிப்போது*  மூன்றுஏழ்என்றுஎண்ணினான்,*  ஆர்ந்த
    அடிப்போது நங்கட்கு அரண்.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஆய்ந்த - ஆராய்ந்து அதிகரிக்கப்பட்ட
அரு மறையான் - அருமையான வேதங்களையுடையனான
நான் முகத்தோன் - சதுர்முக ப்ரஹ்மாவினுடைய
நன் குறங்கில் - அழகிய மடியிலே
வாய்ந்த - நேர்பட்ட

விளக்க உரை

இப்பாட்டில் அநுஸந்திக்கப்பட்டிருக்கும் பகவத் கதை முதல் திருவந்தாதியில் (45) “ஆமே யமரர்க்கறிய“ என்ற பாட்டின் “பூமேய மாதவத்தோன் தாள்பணிந்த வாளரக்கன் நீண்முடியைப், பாதமத்தா வெண்ணினான்பண்பு“ என்ற பின்னடிகளிலும், நான்முகன் திருவந்தாதியில் “கொண்டு குடங்கால்மேல் வைத்த குழவியாய், தண்டவரக்கன் தலைதாளாற் பண்டெண்ணிப் போங்குமரன் . . .“ என்ற நாற்பத்து நான்காம்பாட்டிலும் பொய்கையாழ்வாராலும் திருமழிசைப்பிரானாலும் அநுஸந்திக்கப்பட்டுள்ளது. முன்பு இராவணன் தனது பத்துத்தலைகளை மறைத்துக்கொண்டு நான்முகனிடஞ்சென்று வரம்வேண்டிக்கொள்ளுமளவில் எம்பெருமான் ஒரு சிறு குழந்தைவடிவாய் அப்பிரமனுடைய மடியிலே உறங்குவான்போலே கிடந்து ‘இவன் பத்துத் தலைகளையுடைய இராவணன், ஸ்வஸ்வரூபத்தை மறைத்துக்கொண்டு உன்னை வஞ்சித்து வரம் வேண்டிக்கொள்ள வந்திருக்கிறான், இவனுக்கு நீ வரமளித்தால் பெருந்தீய்காக முடியும் என்று தெரிவிப்பவன் போன்று தன் திருவடியால் அவ்விராவணனுடைய பத்துத்தலைகளையும் எண்ணிக் காட்டினன் – என்பதாக இவ்வரலாறு வளங்குகின்றது. இக்கதை இதிஹாஸ புராணங்களில் உள்ள விடம் தெரியவில்லை, பெரியாழ்வார் திருமொழியில் 1. “சீமாலிகனவனோடு தோழமைக்கொள்ளவும் வல்லாய், சாமாறவனை நீயெண்ணிச் சக்கரத்தால் தலைகொண்டாய்“ என்றும், 2. “எல்லியம்போ தினிதிருத்த லிருந்த்தோ ரிடவகையில் மல்லிகை மாமாலைகொண்டு அங்கார்த்ததுமோ ரடையாளம்“ என்றும் அருளிச்செய்த கதைகள் வியாஸர் வால்மீகி முதலிய முனிவர்களால் ஸாக்ஷாத்கரிக்கப்படாமல் ஆழ்வாரால் மாத்திரம் நீர்ஹேதுக பகவத் கடாக்ஷமடியாக ஸாக்ஷாத்கரிக்கப்பட்டவை என்ற நம்பூருவாசாரிகள் நிர்வஹித்திருப்பதுபோலவே இக்கதையும் ஆழ்வார்களால் மாத்திரம் ஸாக்ஷாத்கரிக்கப்பட்டதென்று பெரியொர் கூறுவர். இனி, இதற்கு இதிஹாஸ புராணங்களில் ஆகரமுண்டேல் கண்டுகொள்க. விரிவும் வல்லார்வாய்க் கேட்டுணர்க.

English Translation

The wilful Lord lay as a child in the learned Vedic seer Brahma's lap when the mighty Ravana came with penance and worship. The Lord then counted his ten toes. Worship his feet, our eternal refuge, O Heart!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்