விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    முன்னுலகம்*  உண்டுமிழ்ந்தாய்க்கு,*  அவ்வுலகம் ஈரடியால்*
    பின்னளந்து கோடல் பெரிதொன்றே?*  - என்னே
    திருமாலே!* . செங்கண் நெடியானே,* எங்கள்
    பெருமானே!. நீயிதனைப் பேசு.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஈர் அடியால் - இரண்டு திருவடிகளாலே
அளந்து கோடல் - அளந்து கொள்வதானது
பெரிது ஒன்றே - பெரியவொரு காரியமாகுமோ?
திருமாலே - திருமகள்நாதனே!
செம் கண் நெடியானே - சிவந்த திருக்கண்களையுடைய ஸர்வாதிகளே!

விளக்க உரை

கீழ்ப் பதினெட்டாம் பாட்டில் உலகளந்த சரிதமும் பத்தொன்பதாம் பாட்டில் உலகமுண்ட சரிதமும் அநுஸந்திக்கப்பட்டன வாதலால். இவ்விரண்டு சரிதங்களையும் சேர்த்தநுபவித்து, வேடிக்கையாக ஒரு கேள்வி கேட்கிறார் எம்பெருமானையே நோக்கி. அதாவது – மிகச்சிறிய வடிவுகொண்டு ஏழுலகங்களையும் உண்டும் உமிழ்ந்தும் போந்த நீ அவ்வுலகங்களை மிகப் பெரிய இரண்டு திருவடிகளினால் அளந்துகொண்டாயென்றால் இது ஒரு வியப்போ? இதை அரிய பெரிய காரியமாக எல்லாரும் சொல்லிக் கொள்ளுகிறார்களே, இஃது என்னோ? என்கிறார்.

English Translation

For the first cause Lord who swallowed and remade the Earth, is it any big feat to come again and measure it in two strides?, O, senkamall O, Tirumall our lord and Master! Speak.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்