விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    எங்கள் பெருமான்*  இமையோர் தலைமகன்! நீ,* 
    செங்கண் நெடு மால் திருமார்பா,*  - பொங்கு-
    பட மூக்கின் ஆயிர வாய்ப்*  பாம்பு அணைமேல் சேர்ந்தாய்,* 
    குடமூக்குக் கோயிலாக் கொண்டு.   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

செம் கண் நெடுமால் – சிவந்த திருக்கண்களையுடைய ஸர்வேச்வரனே!
திருமார்பா – பிராட்டியைத் திருமார்பிலுடையவனே!
இமையோர் தலை மகன் நீ – நித்யஸூரிகளுக்குத் தலைவனான நீ
எங்கள் பெருமான் – எங்களுக்கு ரக்ஷகனாய்க் கொண்டு
குடமூக்கு இல் – கும்பகோக் க்ஷேத்ரத்தை

விளக்க உரை

எம்பெருமானே! என்போன்ற அடியார்களை விஷயீ கரிப்பதற்காகவன்றோ திருக்குடந்தையிலே வந்து சாய்ந்தருளா நின்றாய் என்கிறார். ‘கும்பகோணம்‘ என்ற வடசொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் குடமூக்கு என்பதாம். (கும்பம் –குடம், கோணம் –மூக்கு) இல் –க்ருஹம்.

English Translation

O Lord! You are the monarch of even the gods. O Senikanmal, with lotus-dame lakshmi on your chest! You recline on a thousand-hooded snake. You reside in the temple of kudandai.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்