விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    இன்றா அறிகின்றேன் அல்லேன்*  இரு நிலத்தைச்-
    சென்று ஆங்கு அளந்த திருவடியை.*  - அன்று- 
    கருக்கோட்டியுள் கிடந்து*  கைதொழுதேன் கண்டேன்,* 
    திருக்கோட்டி எந்தை திறம்.    

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அன்று கரு கோட்டியுன் கிடந்து – முன்பு கர்ப்ப ஸ்தானத்துக்குள்ளே கிடந்து
திருக்கோட்டி எந்தை திறம் – திருக்கோட்டியூர்ப் பெருமானுடைய தன்மைகளை
கண்டேன் – கண்டு அநுபவிக்கப்பெற்றேன்
கை தொழுதேன் – கைதொழவும் பெற்றேன், (ஆனபின்பு)
இரு நிலத்தை – விசாலமான இந்நிலத்தை

விளக்க உரை

இப்பாட்டும் கீழ்ப்பாட்டுக்கு சேஷபூதமானதேயாம் எம்பெருமானது திருவருளால் தமக்குண்டான வைலக்ஷண்யத்தைப் பேசுகிறார். நான் கர்ப்பவாஸம் செய்யும்போதே பிடித்து எம்பெருமானால் நிர்ஹேதுகமாகக் கடாக்ஷிக்கப்பெற்றுத் தன்னுடைய ஸ்வரூப ரூபகுண் விபூதிகளையெல்லாம் அவன் தானே காட்டக்கண்டு “ஜாயமாநம் ஹி புருஷம் யம் பச்யேத் மதுஸூதந ஸாத்லிகஸ் ஸது விஜ்ஞேயஸ் ஸவை மோக்ஷார்த்த சிந்தக – (கர்ப்பத்திலேயே எம்பெருமான் எவனைக் கடாக்ஷித்தருள்வனோ அவனே ஸாத்விகன், அவனே முழுக்ஷுவாவான்) என்கிறபடியே சுத்த ஸாத்விகனாய் அப்பெருமானுடைய திருக்கல்யாண குணம் முதலியவற்றை ஸ்வயம் அநுபவிப்பதும் பிறர்க்கு எடுத்து உபதேசிப்பதுமாக இவற்றையே காலக்ஷேபமாகக் கொண்டிருந்தவன், எல்லாரும் பகவானை மறந்திருக்கும்படியான கர்ப்பவாஸ காலத்திலுங்கூட அடியேன் அவனை மறவாது வாழ்த்தக்கொண்டிருந்தேனாகையால், நான் எம்பெருமானை நெடுநாளாகவே அறிந்தவனேயன்றி இன்று புதிதாக அறிந்தவனல்லேன்.

English Translation

Is it only now that I understand my Tirukottiyur Lord's grace? Certainly not. Even when I lay in the dark womb I folded my hands and saw the feet of the Earth-straddling Lord.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்