விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வரைச் சந்தனக் குழம்பும்*  வான் கலனும் பட்டும்,* 
    விரைப் பொலிந்த வெண் மல்லிகையும் நிரைத்துக்கொண்டு* 
    ஆதிக்கண் நின்ற*  அறிவன் அடி இணையே*
    ஓதிப் பணிவது உறும் . 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வரை சந்தனம் குழம்பும் – (மலய) பர்வதத்தினின்று முண்டான சந்தனத்தின் குழம்பையும்
வான் கலனும் – சிறந்த ஆபரணங்களையும்
பட்டும் – பட்டுப் பீதாம்பரங்களையும்
விரை பொலிந்த – பரிமளம் விஞ்சி யிருக்கப்பெற்ற
வெண் மல்லிகையும் – வெளுத்த மல்லிகை மலர்களையும்

விளக்க உரை

- எம்பெருமானைத் திருவடிதொழுவதற்காக அவன் ஸந்நிதிக்கு நாம் பிடைகொள்ளும்போது “***“ அரசனையும் கடவுளையும் ஆசார்யனையும் வெறுங்கையனாக அணுகலாகாது என்ற விதியை அடியொற்றியும் நமது காதலுக்கு இணங்கவும் அப்பெருமானுக்கு உரிய பொருள்களைக் கையிற்கொண்டு செல்லவேணுமென்கிறார். சிறந்த சந்தனம், திவ்யமான ஆபரணம், உயர்ந்த பீதாம்பரம், நறுமணமிக்க நன்மல்லிகைமலர் ஆகிய இவற்றைக் கையிற்கொண்டு சென்று எம்பெருமானது திருவடிகளைத்துதித்து வணங்குதல் நன்று. இப்பாசுரத்திற்கு ஓரடைவிலே அழகிய மணவாளச்சீயர் ரஸோக்தியாக ஏற்பட்டு உபந்யஸித்த ஒரு பொருளும் குறிக்கொள்ளத்தக்கதே, அதாவது –வரைச்சந்தனக்குழம்பு முதலியவற்றை எம்பெருமானுக்கு ஸமர்ப்பிக்கும்பொருட்டு கையிற்கொண்டு ஸந்திக்குச் செல்லவேணுமென்பதே இப்பாசுரத்தின் பொருளாயினும் வேறுவகையான பொருளும் தொனிக்கின்றது. அன்பர்கள் பகவத்ஸந்நிதியிலே அருளிச்செயல் ஸேவிக்கப் போகும்போது அழுக்குடம்போடும் கந்தைத்துணியோடும் சிக்குநாற்றத்தலையோடும் போகுகையின்றியே, “மெய்யிட நல்லதோர் சாந்தமும்“ என்கிறபடியே அழகாக உடம்பிற் சந்தனம் பூசிக்கொண்டும், “கழுத்துக்குப்பூணொடு காதுக்குக் குண்டலமும்“ என்கிறபடியே திவ்ய வஸ்த்ர முடுத்துக்கொண்டும், “தொடுத்த நுழாய்மலர் குடிக்களைந்தன சூடுமித்தொண்டர்களோம்“ என்கிறபடியே நல்ல புஷ்பங்களைச் சூடிக்கொண்டும் சென்று ஓதிப்பணிவது உறும் –அருளிச்செயல் ஓதுவது நன்று –என்றாம். பண்டைகாலத்தில் பட்டர் இயல் கோஷ்டிக்கு எழுந்தருளும்போது இவ்வகை அலங்காரங்களுடனெ எழுந்தருள்வரென்பது ப்ரஸித்தம்.

English Translation

Wearing mountain sandal perfume. Silk vestments, beautiful ornaments and fragrant white jasmine in plenty. The wonder lard stands as pure knowledge. If behoves us to praise and worship. His matching feet.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்