விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கும்மாயத்தொடு வெண்ணெய் விழுங்கிக்*  குடத் தயிர் சாய்த்துப் பருகி* 
    பொய்ம் மாய மருது ஆன அசுரரைப்*  பொன்றுவித்து இன்று நீ வந்தாய்*
    இம் மாயம் வல்ல பிள்ளை- நம்பீ!*  உன்னை என்மகனே என்பர் நின்றார்* 
    அம்மா உன்னை அறிந்துகொண்டேன்*  உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே*

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கும்மாயத்தோடு - குழையச்சமைத்த பருப்பையும்;
வெண்ணெய் - வெண்ணெயையும்;
விழுங்கி - விழுங்கி விட்டு;
குடம் தயிர் - குடத்தில் நிறைந்த தயிரை;
சாய்த்து - (அந்தக் குடத்தோடு) சாய்த்து;

விளக்க உரை

இச்சேரியில் ஒருத்தி வீட்டில் ஒன்றுவைக்க வொண்ணாதபடி எல்லாப் பண்டங்களையும் களவுகண்டும், மருதமரங்களை அவற்றின் நினைவறிந்து முறித்துந் திரிகிற உன் விசேஷங்களை யறியாதே உதாஸீநராயிருப்பவர்கள் உன்னை என் மகனாகச் சொல்லுவர்கள்; நான் உன் வாசியை யறிந்தவலாகையால் உன்னை ஸாக்ஷாத் ஸர்வேச்வரனாகவே அறுதியிட்டு உனக்கு முலைகொடுக்க அஞ்சாநின்றேனென்கிறாள். பிள்ளை, நம்பி-அண்மைவிளி.என்மகனே என்பர்= ‘இவன் என் பிள்ளையன்று’ என்று நான் ஆணையிட்டுச் சொன்னாலும் அவர் கேளார் என்ற கருத்துத்தோன்றும்; ஏ-பிரிநிலை.

English Translation

After gulping mashed lentils with butter you overturned the pitcher and gorged yourself with curds. You felled the Asuras who were disguised as trees, and you stand here innocently. O Child-god capable of wonders! People speak of you as my son. O No! I know you now, I fear to give you suck.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்