விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    உளது என்று இறுமாவார்*  உண்டு இல்லை என்று,*
    தளர்தல் அதன் அருகும் சாரார்,*  - அளவு அரிய-
    வேதத்தான் வேங்கடத்தான்*  விண்ணோர் முடி தோயும்,*
    பாதத்தான் பாதம் பயின்று.        

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அளவு அரிய வேதத்தான் – அளவிட முடியாதபடி அந்நதமாயுள்ள வேதங்களினால் பிரதிபாதிக்கப்படுபவனும்
வேங்கடத் தான் – திருமலையிலே வந்து நிற்பவனும்
பயின்று – பழகி (இருக்குமவர்கள்)
உளது என்று இறுமாவார் – தமக்குச் செல்வமுள்ள தென்று செருக்குக் கொள்ள மாட்டார்கள்
உண்டு இல்லை என்று – (செல்வம்) நேற்று இருந்து இன்று அழிந்த போயிற்றென்று

விளக்க உரை

பாகவதர்களின் பெருமையைப் பேசுகிறார். ஸகல வேதங்களினாலும் பரம்பொருளாகப் பிரதிபாதிக்கப்பட்டவனும், அந்த மேன்மை விளங்குமாறு திருமலையில் வந்து நித்ய ஸ்ந்நிதி பண்ணியிருப்பவனும், அங்கே நித்யஸூரிகளும் வந்து அடிபணிய நிற்பவனுமான எம்பெருமானுடைய திருவடிகளிற் பழகுகின்ற பாகவதர்கள் செல்வம் படைத்தாலும் ‘நாம் செல்வம் படைக்கப் பெற்றோம், நம்மோடு ஒத்தாரும் மிக்காருமில்லை‘ என்று செருக்குக் கொள்ளமாட்டார்கள், இருந்த செல்வம் அழிந்து போனாலும் ‘ஐயோ! ஏழைமை வந்து விட்டதே!‘ என்று சிறிதும் தளர்ச்சியடையமாட்டார்கள் 1. “களிப்புங் கவர்வுமற்று“ என்ற பாசுரத்திற் சொன்னபடி லாபநஷ்டங்களில் ஒருபடிப்பட்ட சிந்தை நிலைமையையுடையராயிருப்பர் 2. “முனியார் துயரங்கள் முந்திலும், இன்பங்கள் மொய்த்திடினுங் கனியார் மனம்... எங்களிராமாநுசனை வந்தெய்தினர்“ என்ற ஸ்ரீ ராமாநுஜபக்தர்களைப் போன்றிருப்பர்களாம் பகவத்பக்தர்களும். உண்டில்லை யென்று – செல்வம் அடியோடு இல்லாதவர்களுக்கு அவ்வளவாகத் தளர்ச்சி இராது, சிலநாள் இருந்து கழிந்தவர்களுக்கு அளவற்ற தளர்ச்சி உண்டாக ப்ரஸக்தியுண்டே அப்படிப்பட்ட நிலைமையிலும் தளரமாட்டார்கள் என்கைக்காக “உண்டில்லை யென்று“ என்றார். ‘நேற்று உண்டாயிருந்தது, இன்று இல்லையா யொழிந்தது‘ என்று தளரமாட்டார்கள் என்கை.

English Translation

His name is the form in venkatam. He is the Lord of the unfathomable vedas. His feet are worshipped by the celestials. Devotees feel they have everything and never despair about what they do not have, after worshipping the Lord.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்