விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    சிறந்தார்க்கு எழு துணையாம்*  செங்கண் மால் நாமம்.*
    மறந்தாரை மானிடமா வையேன்,*  அறம் தாங்கும்-
    மாதவனே என்னும்*  மனம் படைத்து,*  மற்று அவன்பேர்-
    ஓதுவதே*  நாவினால் உள்ளு. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

சிறந்தார்க்கு – ஸ்ரீவைஷ்ணவோத்தமர்களுக்கு
எழுதுணை ஆம் – உஜ்ஜீவந ஹேதுவான துணையாகின்ற
நாமம் – திருநாமத்தை
மறந்தாரை – மறப்பவர்களை
மானிடம் ஆ – மநுஷ்ய்யோனியிற் பிறந்தவர்களாக

விளக்க உரை

‘சிறந்தார்‘ என்றது – பகவத்கீதையில் “ஜ்ஞாநீத்வாத்மைவ மே மதம் – ஞானியானவ் எனக்கே உயிராயிருப்பன்” என்று கீதாசார்யனான தானே அருளிச்செய்யும்படி அவனுடைய உகப்புக்கு இலக்கான மாஞானிகளை. அப்படிப்பட்டவர்கள் உஜ்ஜீவிப்பதற்கு உரிய துணையான எம்பெருமானுடைய திருநாமத்தை ஸர்வகாலமும் ஸ்மரிக்கவேண்டியது கடமையாயிருக்க, எவர்கள் மறந்திருக்கின்றார்களோ, அவர்களை மநுஷ்யகோடியில் இட்டு எண்ணமாட்டேன் – என்கிறார் முன்னடிகளில் 1. “ஆன்விடையேழன்ற டர்த்தாற்கு ஆளானாரல்லாதார், மானிடவரல்லரென்று என் மனத்தே வைத்தேனே“ என்றார் திருமங்கை யாழ்வாரும். தாம் இருக்க வேண்டும்படியைத் தம்முடைய நெஞ்சுக்கு உரைக்கிறார் பின்னடிகளில். “நெஞ்சே“ என்னும் விளி வருவித்துக்கொள்வது. நெஞ்சே! தர்ம ஸம்ஸ்தாபநம் பண்ணுவதற்காக அவதரிக்கிறேன் என்று தானே சொல்லிக் கொண்டபடி வேண்டியபோது திருவவதரித்துக் தருமநெறியைத் தாங்குகின்ற மாதவனே! என்று சொல்லி எம்பெருமானுடைய தன்மைகளையே அநுஸந்திக்கும்படியான உறுதிக்கொண்டு அவனது திருநாமங்களை ஓதுவதே உரியதென்று கொண்டிரு – என்று உபதேசித்தாராயிற்று.

English Translation

To the SPECIAL ones, the Lord senkanmal is an excellent companion. Those who allow themselves to forget his names are not men worth their names. Always firmly believe that the Madava is the bearer of Dharma, and make it a habit to chant his name.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்