விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    சிறியார் பெருமை*  சிறிதின்கண் எய்தும்,* 
    அறியாரும் தாம் அறியார் ஆவர்,*  - அறியாமை- 
    மண் கொண்டு மண் உண்டு*  மண் உமிழ்ந்த மாயன் என்று,*
    எண் கொண்டு என் நெஞ்சே! இரு.       

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

சிறியார் - (இயற்கையான மேன்மை சிறிதுமில்லாமல்) அற்பரான ஸம்ஸாரிகளுடைய
பெருமை - (நானே ஈச்வரன் என்று அஹங்கரிப்பதால் வருகிற) மேன்மையானது
சிறிதின் கண் எய்தும் - (தமக்குப்பழமையாயுள்ள) தாழ்விலேயே கொண்டு சேர்ப்பிக்கும்;
அறியாரும் - அவிவேகிகளும்

விளக்க உரை

கீழ்ப்பாட்டில் நாட்டாருடைய செயலை நினைந்து வெறுத்த ஆழ்வார் இதில் தம் திருவுள்ளத்தை நோக்கி ‘நெஞ்சே! உலகத்தார் ஒழிகிறபடி ஒழிக; நீ எம்பெருமானுடைய சேஷ்டிதங்களையே எப்போதும் சிந்தித்துக் கொண்டிரு’ என்று உபதேசிக்கிறார். சிறியார் பெருமை சிறிதின்கண் எய்தும் = உலகத்தில், இயற்கையாகச் சிறிதேனும் மேன்மையுடையவர்களாயிருந்தால் அவர்கள அதிகப்படியாக மேன்மையை ஏறிட்டுக்கொண்டாலும் ஒருவாறு ஏற்கும்; சிறிதும் மேன்மையற்றவர்கள் ‘நாமே பெரியோம்; நம்மிற் பெரியாரில்லை’ என்று மார்பு நெறித்தால் அந்த அஹங்காரமானது அவர்களுடைய சிறுமையை நன்கு ஸ்தாபித்துவிடும். ஆகையாலே அற்ப தேவைகளான பிரமன் முதலியோரைப் பெருந்தலைமை யுடையவராக மதிப்பது நம்மைத் தாழ்ந்த நிலைமையிற் சேர்ப்பிக்கு மென்றவாறுமாம். எய்தும் - எய்துவிக்கும்; பிறவினையில் வந்த தன்வினை. இவ்வாறு வருவதனை வடநூலார் ‘அந்தர்ப்பாவிதணிச்’ என்பர்.

English Translation

Praising small gods can only give small ends. The ignorant ones will remain forever ignorant. O Heart of mine1 Always recall the wonder Lord who mysteriously measured the earth, swallowed it and brought it out again.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்