விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    துணிந்தது சிந்தை*  துழாய் அலங்கல்,*  அங்கம்-
    அணிந்தவன்*  பேர் உள்ளத்துப் பல்கால்,*  - பணிந்ததுவும்- 
    வேய் பிறங்கு சாரல்*  விறல் வேங்கடவனையே,* 
    வாய் திறங்கள் சொல்லும் வகை.             

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

சிந்தை - என்மனமானது
துழாய் அலங்கல் அணிந்தவன் பேர் - திருத்துழாய் மாலையை அணிந்துள்ள பெருமானுடைய திருநாமங்களை
பல்கால் - பலமுறை
உள்ளத்து - நினைப்பதில்
துணிந்தது - த்ருடமாக அத்யவஸாயங் கொண்டது;

விளக்க உரை

“யத் ஹி மநஸா த்யாயதி தத் வாசா வததி தத் கர்மணா கரோதி” என்று வேதத்திற் சொல்லுகிறபடியே முதலில் சிந்தை சிந்திப்பது பிறகு வாய் சொல்லுவது, அதன்பிறகு உடல் செய்வது என்றிப்படி மனமொழி மெய்களின் செயல்முறைமை ஏற்பட்டிருக்கும் விதமாகத் தமக்கு அந்த மூன்று கரணங்களும் பகவத் விஷயத்தில் அவகாஹித்தபடியைக் கீழ்ப்பாசுரத்திற் பேசினர்; இந்த முறைமையின்படியே ஒழுகாது, வாக்குக்கு முன்னே சரீரம் முந்துகிறபடியை இப்பாசுரத்தில் மொழிகின்றார். ‘நான் முன்னே நான் முன்னே’ என்று தம்முடைய இந்திரியங்கள் பகவத் விஷயாநுபவத்துக்கு முற்படும்படியைத் தெரிவித்தவாறு. கீழ்ப்பாட்டில் மனமொழி மெய்களை வரிசையாகச்சொல்லி, இப்பாட்டில் ‘சிந்தை, அங்கம், வாய், என்று மாறுபடக் கூறியிருத்தல் காண்க. “வேய் பிறங்கு சாரல்” என்ற விசேஷணம் ‘வேங்கடவனை என்பதில் ஏக தேசமான வேங்கடத்தில் அந்வயிக்கும்; ‘விறல்’ என்ற விசேஷணம் வேங்கடவனுக்கு அந்வயிக்கும். விறல் - பெருமை, வலி, வீரம், வெற்றி. திறம் - குணம், சாமர்த்தியம், தன்மை, மேன்மை முதலியன. திருவேங்கடமுடையானுடைய ஸ்வரூபகுண விபூதிகளைச் சொல்லிக் கொண்டிருப்பதிலே வாய்துணிவு கொண்டதென்கை.

English Translation

Madly raving the names of the Tulasi-garland. Wearing lord, my heart is set on him alone. My tongue speaks of his glories alone. My body worships only the lord in venkatam surrounded by bamboo forests. O!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்