விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பண்டிப் பெரும் பதியை ஆக்கி*  பழி பாவம்-
    கொண்டு இங்கு*  வாழ்வாரைக் கூறாதே,*  - எண்திசையும்-
    பேர்த்த கரம் நான்கு உடையான்*  பேர் ஓதி பேதைகாள்* 
    தீர்த்தகரர் ஆமின் திரிந்து.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பேதைகாள் - அவிவேகிகளே!,
பண்டியை - வயிற்றை
பெரு பதி ஆக்கி - பெரிய ஊர்போலக் கண்டதையுங் கொண்டு நிரம்பச் செய்து வளர்த்து
பழி பாவம் கொண்டு - தெரியாமல் விளையுங் குற்றங்களையும் தெரிந்து செய்யுங் குற்றங்களையும் மேன்மேலும் வளர்த்துக் கொண்டு
இங்கு - இவ்வுலகில்

விளக்க உரை

சிறியார் பெரியாரென்னும் வாசியின்றி யாவராலும் எம்பெருமான் ஆச்ரயிக்கத் தக்கவனென்று கீழ்ப்பாசுரங்களால் ஸ்தாபிக்கப்பட்டதான பின்பு, ஸம்ஸாரிகளைக் ஸ்தோத்ரஞ்செய்துகொண்டு அதனால் இந்தப் பிரபஞ்சத்திலேயே உழன்றுகொண்டு தடுமாறாமல் அப்பெருமானைப் பணிந்து அவனது திருநாமங்களைச் சொல்லி அவ்வழியால் நீங்கள் மாத்திரம் ஈடேறுவதோடு நில்லாமல் உங்களுடைய ஸஞ்சாரத்தாலே நாடு முழுதும் பரிசுத்தமாகும்படி செய்யுங்கோளென்று நாட்டாரை விளித்து உபதேசிக்கின்றாரிதில், எண்ட பொருளையுங்கொண்டு வயிற்றை நிரப்புவதற்காகப் பழிபாவங்களைச் செய்து வாழ்கின்ற ஸம்ஸாரிகளைத் துதிப்பவர் விவேகிகளல்லர், பேதையர்களேயாவர் என்பது விளங்கப் ‘பேதைகாள்!’ என விளக்கின்றனர். “பெரும்பகுதியை” என்ற விடத்துள்ள இரண்டாம் வேற்றுமையுருபைப் பிரித்து ‘பண்டி’ என்பதோடு கூட்டியுரைக்கப்பட்டது. பண்டியென்று வயிற்றுக்குப் பெயர். அதனைப் பெரும்பதியாக்குவதாவது வளர்ப்பதாம்; கண்டதையும் தின்று தின்று ஏற்றச்சால்போலே வயிற்றை வைத்துக் கொண்டிருக்குமவர்களை நச்சிக் கவிபாடிக் காசுபெற்று வயிறுவளர்க்குந் தொழிலை விட்டுத்தொலையுங்கோளென்று முன்னடிகளாற் கூறினாராயிற்று. “பண்டு இப்பெரும்பதியை ஆக்கி” என்று பிரித்து பண்டு - அநாதிகாலமாக, இப்பெரும்பதியை - இந்த ஸம்ஸாரத்தை, ஆக்கி - வளர்த்துக்கொண்டு என்றுரைக்கவுமாம்.

English Translation

Making the abode of food your temple, O Foolish people, you go about speaking words of sin and blame to please mortal men. Instead wander reciting the names of the Lord whose four arms stretched into the eight Quarters and become holy men of the Lord.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்