விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வரத்தால் வலிநினைந்து*  மாதவ! நின் பாதம்,*
    சிரத்தால் வணங்கானாம் என்றே,* - உரத்தினால்-
    ஈர்அரியாய்*  நேர்வலியோன்ஆய இரணியனை,* 
    ஓர்அரியாய் நீஇடந்தது ஊன்?  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மாதவ - திருமாலே!
ஈர் அரி ஆய் - (இரண்டு கூறாகக்) கிழித்துப் போடவேண்டிய சத்துருவாகி
நேர் வலியோன் ஆய் - எதிர்த்து நின்று போர் செய்யும் வலிவையுடையனாகிய
இரணியனை - ஹிரண்யாஸுரனது
ஊன் - சரீரத்தை ,

விளக்க உரை

“ஈச்வரன் அவதரித்துப் பண்ணின ஆனைத் தொழில்களெல்லாம் பாகவதாபசாரம் பொறாமை யென்று ஜீயரருளிச் செய்வர்” என்று ஸ்ரீவசநபூஷணத்திற் பாசுரம். அதாவது-ஸங்கல்ப மாத்திரத்தாலே எல்லாவற்றையும் நிர்வஹிக்க வல்ல ஸர்வ சக்தியான ஸர்வேச்வரன் தன்னையழியமாறி இதர ஸஜாதீயனா யவதரித்துக் கைதொடனாய் நின்று செய்த ஹிரண்ய ராவணாதி நிரஸநரூபமான அதிமாநுஷ க்ருத்யங்களெல்லாம் ப்ரஹ்லாதன் மஹர்ஷிகள் முதலான பாகவதர் திறத்தில் அவ்வவர் பண்ணின அபசாரம் ஸஹியாமையாலே என்று நஞ்சீயரருளிசெய்வராம். இவ்வர்த்தமே இப்பாட்டி லருளிச்செய்யப்படுகிறது. எம்பெருமான் தன்னளவிலே தீரக்கழிய அபராதப் படுமவர்களைபற்றி ஒன்றும் கணிசியான்; ஆச்ரிதர் விஷயத்தில் ஸ்வல்பாபராகம் பண்ணுவானுண்டாகிலும் அவனை அப்போதே தலையறுத்துப் பொகடுவானென்பது இதிஹாஸ புராண ப்ரஸித்தம் [”த்வயி கிஞ்சித் ஸமாபந்நே கிம் கார்யம் ஸீதயாமம”] இராமபிரான் எழுந்தருளி நிற்கச்செய்தே இராவணன் கோபுர சிகரத்திலே வந்து தோற்றினவாறே ‘ராஜத்ரோஹியான இப்பயல் பெருமாள் திருமுன்பே நிற்கையாவதென்? ‘ என்று ஸுக்ரீவமஹாராஜர் அவன்மேலே பாய்ந்து வென்று வந்தபோது அவரை நோக்கிப் பெருமாள் இங்ஙனே அருளிச்செய்கிறார்;— நீர் மஹாராஜரான தரம்குலைய [உம்மைத் திரஸ்கரித்து] அந்த ராக்ஷஸப்பயல் ஒருவார்த்தை சொன்னானாகிற் பிறகு ஸீதைதானும் எனக்கு ஏதுக்கு?, என்றார். ஆச்ரித விஷயத்திலே; எம்பெருமானுடைய பக்ஷபாதம் இப்படியன்றோ இருப்பது. தன் உயிர்நிலையான பாகவதர்களுக்கு ஒரு தீங்கு நேர்ந்தால், தனக்குத் தீங்குநேரும்போது பிறக்கும் சீற்றம் அற்பமென்னும்படி சீற்றம் பெருகிச்செல்லும். தான் ஸமுத்ரராஜனை சரணம் புகச்செய்தேயும் அவன் முகங்காட்டிற்றில்லனாக, “ கோபமாஹாரயத் தீவ்ரம்” என்னும்படி சீற்றத்தை வரவழைத்துக் கொண்டார் பெருமாள்; பின்பு இராவணனாலே அனுமான் நோவுபட்டபோது “ததோ ராமோ மஹாதேஜா: ராவனேநக்ருதவ்ரணம் – த்ருஷ்ட்வா ப்லவக சார்தூலம் கோபஸ்ய வசமேயிவாந்.” என்னும்படி கோபமிட்ட வழக்கானார். இங்ஙனேயிறே பாகவத விஷயத்திலே எம்பெருமானுக்குள்ள பரிவின் மிகுதியிருப்பது இரணியன் எம்பெருமான் திறத்திலே நேராக அபசாரப்பட்டுத் திரிந்தநாள்கள் எண்ணிறந்தவையுண்டு; அந்நாட்களிலே எம்பெருமானுடைய திருவுள்ளம் அவ்வரக்கனளவிலே சிறிதும் விகாரப்படவில்லை; பள்ளியிலோதிவந்த தன்சிறுவன் வாயிலோராயிரநாமம் ஒள்ளிய வாகிப்போத ஆங்கதனுக்கு ஒன்றுமோர் பொறுப்பிலனாகிப் பிள்ளையைச் சீறிவெகுண்டு நலிந்தானென்று அறிந்தவாறே “நம்மளவிலே எத்தனை தீம்பனயிருந்தாலும் பொறுத்திருப்போம்; நம்முடையனான சிறுக்கனை நலிந்தபின்பும் பொறுத்திருக்கவோ” என்று ஆறியிருக்க மாட்டாதே அப்போதே வந்துதோன்றிப் புடைத்தானாயிற்று .

English Translation

A form like a lion sprang and tore apart the mighty chest of the strong Hiranya with sharp nails. O Madava! Was it not because he was proud of his penance-strength and never bowed his head to your feet?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்