விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    எண்மர் பதினொருவர்*  ஈர்அறுவர் ஓர்இருவர்,* 
    வண்ண மலர்ஏந்தி வைகலும்,* - நண்ணி-
    ஒரு மாலையால் பரவி*  ஓவாது,*  எப்போதும்- 
    திருமாலைக் கைதொழுவர் சென்று.   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஓவாது - இடைவிடாமல்
எப்போதும் - எல்லா வேலைகளிலும்
பரவி - துதிசெய்து
திருமாலை சென்று - திருமகள் கொழுநனைக்கிட்டி
கைதொழுவர் - வணங்குவர்கள்

விளக்க உரை

அஹங்காரிகளான முப்பத்து மூவரமரர்களும் எம்பெருமானை யடிபணிந்தே சிறப்புற்றிருக்கின்றனரென்கிறார். முதலடியில் முப்பத்துமூன்றுதேவர்களை எடுத்துக் காட்டினது முப்பத்து முக்கோடி தேவர்களெனப்படுகிற அனைவரையும் எடுத்துக்காட்டினமைக்குப் பர்யாய மென்க. நம்மாழ்வாரும் பெரிய திருவந்தாதியில் “ இருநால்வர் ஈரைந்தின் மேலொருவர். எட்டோடொரு நால்வர் ஓரிருவர்” என்றருளிச்செய்தது காண்க.

English Translation

The eight vasus, the eleven Rudras, the twelve Adityas, the twin Asvins, -they all go with fresh flowers everyday without fail and chant praise, then offer worship with folded hands, to our Lord Tirumal. '

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்