விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மகிழ்அலகு ஒன்றேபோல்*  மாறும் பல்யாக்கை,* 
    நெகிழ முயல்கிற்பார்க்கு அல்லால்,* - முகிழ்விரிந்த-
    சோதிபோல் தோன்றும்*  சுடர்பொன் நெடுமுடி*  எம்- 
    ஆதி காண்பார்க்கும் அரிது  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மாறும் பல் யாக்கை - மாறி மாறிப் பலவகையாக வருகின்ற சரீரங்கள்
நெகிழ - தன்னடையேவிட்டு நீங்கும்படியாக
முயலகிற்பார்க்கு அல்லால் - முயற்சி செய்யக் கூடியவர்களுக்குத் தவிர
ஆர்க்கும் - மற்ற எவர்க்கும்
அரிது - கூடாதகாரியம்.

விளக்க உரை

தேவயோநிகளென்றும் மநுஷ்யயோநிகளென்றும் திர்யக்யோநிகளென்றும் பலவகைப்பட்ட யோநிகளில் பிறப்பதும் இறப்பதுமாகிற ஸம்ஸாரத்தைத் தொலைத்துக் கொள்ள விருப்பமுடையவர்களுக்கே எம்பெருமானைக் காணுதல் கைகூடுமென்கிறார். பலகறை, மகிழம் விதை முதலியவற்றைக் கொண்டு கணிதம் பார்க்கிற முறைகள் சிலவுண்டு; அந்த கணிதத்தில் காணிஸ்தாநமென்றும் கோடிஸ்தாநமென்றும் பாகுபாடுகளுமுண்டு; காணிஸ்தானமென்பது மிகத்தாழ்ந்த ஸ்தாநம்; கோடிஸ்தானமென்பது மிகவுயர்ந்தஸ்தாநம். கணிதம்பார்க்கிற வகையில் ஒரு மகிழம் விதையே சற்றுபோது கணிஸ்தாநத்திலும் சற்றுபோது கோடிஸ்தாநத்திலுமாக மாறிமாறி வந்துகொண்டிருக்கும்; (இது கணிதஸாமர்த்தியத்தைப் பொறுத்ததுமாம்.)அது போல பகவத் ஸங்கல்பத்தாலே கர்மாநுகுணமாக (உத்க்ருஷ்டமாகவும் அபக்ருஷ்டமாகவும்) பலவகைப்பட்டு மாறிமாறி வாரக்கூடிய (பிரமன் முதற்கொண்டு எறும்பு ஈறாகவுள்ள) சரீரங்கள் தொலைந்து நித்யாந்ந்தமநுபவிக்க வேணுமென்று ஆசை கிளரிந்து அதற்குரிய முயற்சியைச் செய்யுமவர்களுக்குத் தவிர மற்று யார்க்கும் எம்பெருமானை ஸாக்ஷாத்கரிப்பது அரிதாகும். நான்காமடியை “ ஆதிகான்பு ஆர்க்கும் அரிது” எனப்பிரித்து உரைக்கப்பட்டது காண்பு – காணுதல். இனி “ காண்பார்க்கும் “ என்று ஒரு சொல்லாகவே கொண்டு உரைக்கவுமாம் காணவேணு மென்னும் விருப்பமுடையவர்களுக்கும் எம் ஆதி அரிது ( அருமைப்படுவன்)

English Translation

The joy of seeing the first-cause Lord, "Who wears a golden crown of radiance spreading all around can be felt only by those who strive to shake off births in this body that continue cyclicallly like the Magil seed beads in the abacus; for others it is difficult.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்