விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மாலும் கருங்கடலே!*  என்நோற்றாய்,*  வையகம்உண்டு- 
    ஆலின் இலைத்துயின்ற ஆழியான்,* - கோலக்-
    கருமேனிச்*  செங்கண்மால் கண்படையுள்,*  என்றும்- 
    திருமேனி நீதீண்டப் பெற்று!  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஆலின் இலை - ஆலந்தளிரிலே
துயின்ற - சயனித்துக் கொண்டவனும்
ஆழியான் - திருவாழியை யுடையவனும்
கோலம் கரு மேனி - அழகிய கறுத்த திருமேனியையுடையவனும்
செம் கண் - செந்தாமரைக் கண்ணனுமான

விளக்க உரை

*பழுதே பலபகலும் போயினவென்று அழுத ஆழ்வார், ‘நம்மைப்போலே எல்லாரும் ஏமாந்தவர்கள்தானோ, அன்றி யாராவது எம்பெருமானை ஒரு நொடிப்பொழுதும் விடாது அநுபவிக்கப் பெற்றவர்களுண்டோ’ என்று ஆராய்ந்து பார்த்தார்; 1. “மாகடல்நீருள்ளான்” என்கிறபடியே ஸமுத்ரத்தில் ஸர்வகாலமும் எம்பெருமான் திருக்கண் வளர்ந்தருளும் செய்தி நினைவுக்கு வந்தது; ஹா! ஹா!! ஸமுத்ர ராஜனுடைய பாக்கியமே பாக்கியம்; ஒரு நொடிப்பொழுதும் விடாமல் எம்பெருமானது திருமேனியைத் தீண்டப்பெற்றிருக்கிறானன்றோ வென்றநுஸந்தித்து அக்கடல்தன்னையே நோக்கி ‘இப்படி உனக்குப்’ பகவதநுபவம் நித்யமாய்ச் செல்லும்படி நீ என்ன நோன்பு நோற்றாய் கொல்?’ என வினவுகின்றார். நீ நோற்ற நோன்பைச் சொல்லுவாயாகில் நானும் அந்த நோன்பை நோற்று இப்பேறு பெறுவேன்காண் என்பது உள்ளுறை. அஃறிணைப் பொருளான கடலை நோக்கிக் கேள்விகேட்பதாகப்பேசின இப்பாசுரத்தின் கருத்தாவது எம்பெருமான் இடைவிடாது திருப்பாற்கடலில் சயனித்திக்கொண்டு உறங்குவான்போல் யோகுசெய்யும் பெருமானாயிருக்கின்றா னென்பதைக் காட்டுவதேயாமென்க. கருங்கடலே!= திருப்பாற்கடல் வெண்ணிறமுள்ளதாயினும் கார்முகில் வண்ணனான எம்பெருமானுடைய நிழலீட்டாலே கருங்கடலாயிற்று. பட்டர் ஸ்ரீ ரங்கராஜ ஸ்தவத்திலே ஸ்ரீரங்கவிமானத்தைப்பற்றிப் பேசிம்போது அபி பணிபதியதிபாவாத் சுப்ரம், அந்தச் சயானோ; மரகதஸீகுமாரை; ரங்கபர்த்துர் மயூகை: -ஸகல ஜலதிபாநச்யாமஜீமூதஜைத்ரம் புளகயதி விமாநம் பாவநம் லோசநே ந:” என்றருளிச் செய்த ச்லோகம் இங்கு ஸ்மரிக்கத்தகும். இதன் கருத்தாவது- திருவனந்தாழ்வானே ஸ்ரீரங்கவிமாநமாக எழுந்தருளியிருக்கையாலே இவ்விமானம் வெண்ணிற முள்ளதாயினும் உள்ளே சயனித்திருக்கின்ற ஸ்ரீரங்கநாதனுடைய மைவண்ணத்திருமேனி நிறத்தின் நிழலீட்டாலே கடலைப்பருகிக் கிளர்ந்த காளமேகத்தை வென்று விளங்குகின்றது.

English Translation

O Dark Ocean! The discus lord who swallowed the Earth and lay on a fig leaf has a beautiful dark frame and adorable red eyes. When the sleeps, you caress his body and replace. When penance earned you this good fortune?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்