விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    செந்நெல் அரிசி சிறு பருப்புச்*  செய்த அக்காரம் நறுநெய் பாலால்* 
    பன்னிரண்டு திருவோணம் அட்டேன்*  பண்டும் இப் பிள்ளை பரிசு அறிவன்* 
    இன்னம் உகப்பன் நான் என்று சொல்லி*  எல்லாம் விழுங்கிட்டுப் போந்து நின்றான்* 
    உன்மகன் தன்னை அசோதை நங்காய்!*  கூவிக் கொள்ளாய் இவையும் சிலவே 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

செந்நெல் அரிசி - செந்நெல்லரிசியும்
சிறு பருப்பு - சிறு பயற்றம்பருப்பும்
செய்த - (சமையற் குற்றமொன்றும் நெராதபடி காய்ச்சித் திரட்டி நன்றாகச்) செய்த
அக்காரம் - கருப்புக்கட்டியும்
நறு நெய் - மணம் மிக்க நெய்யும்

விளக்க உரை

கீழ்ப்பாட்டில் கண்ணபிரான் தாயால் வருந்தி யழைக்கப்பட்டும் அவள் பாற் செல்லாமல் வேறொருத்தியின் வீட்டிலே புகுந்து,அவள் நோன்புக்கு உடலாகச் சமைத்து வைத்துள்ளவற்றை யடங்கலும் வாரிவிழுங்கிவிட்டு வேற்றுப்பொருளில் தேடுதலுற்றவன்போல அபிநயித்து வெளியே வந்து நிற்க, இத்தீம்பைக் கண்ட அவள் ஆற்றமாட்டாமல் யசோதை அருகில் வந்து முறைப்படுகின்றனர். அக்காரம் - திரட்டுப்பால் என்னலாம். (பன்னிரண்டு இத்யாதி). ஒவ்வொரு திருவோணத்திருநாளிலும் வ்ரதாங்கமாகச் சமைக்க வேண்டியவற்றை அவ்வப்போதுகளில் சமைத்திடாமல் சக்திக்கேற்ப ஸாம்வத்ஸரிக வ்ரதங்கொண்டு அவ்விரதநாளில் பன்னிரண்டு திருவோணங்களிலுஞ் சமைக்க வேண்டியவற்றைச் சேர்த்துச் சமைத்தேன் என்று கருத்து. அட்டேன் = அடுதல் - சமைத்தல். (பண்டு மித்யாதி.) வ்ரதாங்கமாக நாம் சமைக்கும் பக்ஷணாதிகளைத் தேவபூஜைக்கு முன்னமே இவன் வாரி விழுங்கிவிடுவன் என்பதை நான் பண்டே அறிவேன் என்றவாறு. ‘இதுவும் ஒன்றே’ என்று ஒருமையாகக் கூறாமல் ‘இவையுஞ்சிலவே’ என்று பன்மையாகக் கூறினது. நீ பிள்ளை வளர்க்கும் பரிசும் அவன் தீமைசெய்யுந் திறமும் நான்வந்து முறைப்படும் முறைமையமெல்லாம் சர்வ அழகியவாயிருக்கின்றன வென்ற கருத்தைக் காட்டும்.

English Translation

O Yasoda! For full twelve asterisms of the Srevanam fast, I have been cooking offerings of rice, lentils, jiggery, milk and Ghee. I knew it all along: he has been eating it all. He walked away saying he would be happy for more. Call your son here, is this any way to be?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்