விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மாயமான் மாயச் செற்று*  மருதுஇற நடந்து,*  வையம்- 
    தாய்அமா பரவை பொங்கத்*  தடவரை திரித்து*  வானோர்க்கு-
    ஈயும்மால் எம்பிரானார்க்கு*  என்னுடைச் சொற்கள் என்னும்,* 
    தூய மாமாலை கொண்டு*  சூட்டுவன் தொண்டனேனே.   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மாயம் - மாயச்செய்கையையுடைய
மான் - மாரீசனாகிற மான்
மாய - முடியும்படி
செற்று - கொன்றவனாயும்
மருது - (இரட்டை) மருதமரங்கள்

விளக்க உரை

கீழ்ப்பாட்டிலே திருமஞ்சனம் பண்ணினார்; இப்பாட்டிலே திருமாலை சூட்டுகிறார். முன்னடிகளிலே எம்பெருமானுடைய நான்கு அவதாரங்களைக் குறிக்கிறார்; “மாயமான் மாயச்செற்று“ என்றதனால் ஸ்ரீராமாவதாரம்; “மருதிறநடந்து“ என்றதனால் க்ருஷ்ணாவதாரம். “வையம்தாய்“ என்றதனால் திரிவிக்ரமாவதாரம். “அம்மா பரவைபொங்கத் தடவரை திரித்து வானோர்க்கீயும்“ என்றதனால் கூர்மாவதாரம். முன்பே விச்வாமித்ரருடைய யாகத்தில் மாரீசனை உயிர் மாய்த்திருக்க வேணும்; அப்போது விட்டிட்டதனாலன்றோ இப்போது இவ்வநர்த்தம் விளைக்க வந்தானென்று உயிர் மாயத் தொலைத்தானாயிற்று. வையம் தாய் = ‘தாய்‘ என்றது தாவி யென்றபடி. “பாயோரடி வைத்ததன் கீழ்ப் பரவை நிலமெல்லாந் தாய்“ என்ற திருவாய்மொழியுங் காண்க. “அம்மா“ என்பது அமா எனத் தொகுத்தலாயிற்று. ஆக இப்படிப்பட்ட எம்பெருமானுக்கு எனது தமிழ்ப்பாசுரங்களாகிய தூயமா மாலையைக் கொண்டு சூட்டுவேனென்றாயிற்று.

English Translation

, this devotee-self, with my pure garland of Tamil poems, shall offer worship to the Lord who killed the magic deer, who went between Marudu trees, who strode the Earth, who churned the ocean with a mount and gave ambrosia to the gods, He is my master.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்