விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    உள்ளமோ ஒன்றில்நில்லாது*  ஓசையில் எரிநின்றுஉண்ணும்* 
    கொள்ளிமேல் எறும்பு போலக்*  குழையுமால் என்தன் உள்ளம்,*
    தெள்ளியீர்! தேவர்க்கு எல்லாம்*  தேவராய் உலகம் கொண்ட- 
    ஒள்ளியீர்,*  உம்மை அல்லால்*  எழுமையும் துணை இலோமே. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

உள்ளமோ - மனமோவென்னில்
ஒன்றில் நில்லாது - ஒரு விஷயத்திலும் பொருந்தி நிற்கிறதில்லை;
ஓசையின் எரி - ஓசையோடு கூடின அக்னி
நின்று உண்ணும் - கவ்விநின்று உண்ணப்பெற்ற
கொள்ளிமேல் - கொள்ளியில் அகப்பட்ட

விளக்க உரை

நாட்டார் எக்கேடு கெட்டாலும் கெட்டுப்போகட்டும்; நானும் அவர்களிலொருவனாய்க் கெட்டுப்போகாதே மருவி வாழப்பெற்றனே யென்று மகிழ்ந்து எம்பெருமானையே துணையாகக் கொண்டிருக்கும் தமது அநந்யகதித்வத்தை வெளியிடுகிறார். என் உள்ளமானது ஜனனமரணங்களை நினைத்து உருகா நின்றது; இதற்கு நான் செய்து கொள்ளக்கூடிய பரிஹாரமொன்றுமில்லை; நீயே துணைநிற்க வேணும் என்று எம்பெருமானை நோக்கி விண்ணப்பஞ் செய்கிறார். உள்ளமோ ஒன்றில் நில்லாது = ஊர்வசீஸாலோக்யம் வேணுமென்று நாட்டங்கலும் தவம்புரியாநிற்க, அந்த ஊர்வசிதானே அர்ஜுநனிடம் வந்து நின்று ‘எனக்குநீ நாயகனாகக் கடவை‘ என்ன; கையெடுத்துக்கும்பிட்டு ‘மாதே! எனக்கு நீ தாய்முறையாகிறாய்; இந்த விருப்பம் உனக்குத் தகாது: ‘கடக்கநில்‘ என்றான் அர்ஜுநன் தானே கீதையில் கண்ணபிரானை நோக்கி சஞ்சலம் ஹி மந க்ருஷ்ண! என்கிறாள்; அவனே அவ்வார்த்தை சொல்லும்போது நாமெல்லாம் எந்த மூலைக்கு! என்கிறார் போலும், கெட்ட விஷயங்களையே பற்றினாலும் அவற்றிலாவது நெஞ்சு நிலைத்து நிற்கிறதோ; அதிலும் தோள்மாறுகின்றது, ஒன்றிலும் நிலைத்து நிற்பதில்லை; இப்படிப்பட்ட நெஞ்சைப் படைத்திருக்கையாலே தீக்கதுவின கொள்ளிக்கட்டையில் அகப்பட்டுக் கொண்ட எறும்புபோலே துடியாநின்றேன் என்கிறார்.

English Translation

Alas, my heart does not stay at one place. I fear like ants caught between two burning ends of firewood. O clear one! O Lord of gods, O Radiant one who took the Earth! Through seen lives, you alone are our refuge!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்