விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    திரு உடைப் பிள்ளைதான் தீயவாறு*  தேக்கம் ஒன்றும் இலன் தேசு உடையன்* 
    உருக வைத்த குடத்தோடு வெண்ணெய்*  உறிஞ்சி உடைத்திட்டுப் போந்து நின்றான்* 
    அருகு இருந்தார் தம்மை அநியாயம்  செய்வதுதான்*  வழக்கோ? அசோதாய்!* 
    வருக என்று உன்மகன் தன்னைக் கூவாய்*  வாழ ஒட்டான் மதுசூதனனே

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

திருஉடை  பிள்ளை தான் - உன் செல்லப்பிள்ளையாகிய கண்ணன்
தீய ஆறு - தீம்பு செய்யும் வழியில்
ஒன்றும் தேக்கம் இவன் - சிறிதும் தாமஸிப்பதில்லை.
தேக உடையன் - அதைத் தனக்குப்) புகழாகக் கொண்டிரா  நின்றான்;
 
 

விளக்க உரை

அசோதாய்! உன் மகன் வீட்டில் வயிறு வளர்ப்பதற்கு ஒன்றுமில்லாமல் இவ்வாறாகத் தீம்பு செய்பவனன்றே; செல்வச் செருக்கினாலன்றோ செய்கிறான். ‘நாம் இதைச்செய்தால் நம்முடைய ஐச்வர்யத்திற்கும் பிறப்புக்கும் தகுமோ’ என்றும் இவன் சிறிதும் ஆலோசிப்பதில்லை; தவிரவும் இப்படித் தீம்பு செய்தே தனக்கும் புகழெனவும் நினைக்கிறானே; இவன் இப்போது என் வீட்டில் வந்து, உருக்க வைத்திருந்த வெண்ணெயைச் சிறிதும் மிஞ்சாதபடி புஜித்துக் கடைசியில் பாத்திரத்தையும் ஓசை கேட்பதற்காகப் பாறையிலிட்டு உடைத்துப்போட்டான். இப்படி உன் வீட்டிற்கு அருகிலிருக்கின்ற எங்களுக்குத் தீம்பு செய்யும்படி உன் பிள்ளையை விடுவது உனக்கு நியாயமோ?, நியாமல்லவே; ஆகையால் நீ உன் பிள்ளையை அழைத்து உன்பக்கல் வைத்துக்கொள்; இல்லாவிட்டாலோ நாங்கள் குடிவாழ்ந்திருக்கவே முடியாது என்று ஓரிடைச்சி வந்து முறையிடுவதாகப் பேசும் பாசுரமிது. தேசு என்பது புகழ் என்னும் பொருளில் இங்கு வந்தது. ‘தேஜஸ்’ என்னும் வடசொற் சிதைவு.

English Translation

You precious son does not stop at anything, he excels in his uniqueness, Drinking Ghee straight from the pot he breaks the pot and slips away. This Madhusudana does not let us live. Is it fair to do such injustice to neighbours? Ask you son to come here.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்