விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வானிடைப் புயலை மாலை*  வரையிடைப் பிரசம் ஈன்ற,* 
    தேனிடைக் கரும்பின் சாற்றை*  திருவினை மருவி வாழார்,*
    மானிடப் பிறவி அந்தோ!*  மதிக்கிலர் கொள்க,*  தம்தம்- 
    ஊனிடைக் குரம்பை வாழ்க்கைக்கு*  உறுதியே வேண்டினாரே. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வானி்டை புயலை - ஆகாசத்திலே வாழ்கிற மேகம்போன்ற வடிவுடையவனும்
மாலை - (அடியார் திறத்தில்) வியாமோஹமுடையவனும்
வரையிடே - மலையிலே
பிரசம் ஈன்ற - தேனீக்களாலே சேர்க்கப்பட்ட
மானிடம் பிறவி - (தாங்கள் மிக அருமையான) மநுஷ்ய ஜன்மமெடுத்திருப்பதை

விளக்க உரை

வானிடைப்புயலை = ஆகாசத்தினிடையே நீர்கொண்டெழுந்து வந்து தோற்றுகிற காளமேகம் வடிவழகையுடையவனை. வானிடை யென்று விசேஷித்ததற்குக் கருத்து என்னென்னில்; ஒரு + ஆலம்பனமுமில்லாத ஆகாசத்தை மேகம் பற்றினாப் போலே புகலொன்றில்லாவடியேனை விஷயீகரித்தான் என்றவாறு. அப்படி விஷயீகரிப்பதற்கு ஹேது ஏதென்ன ‘மாலை‘ என்கிறார்; வியாமோஹமே வடிவெடுத்தவனாதலால் என்க. (வரையிடைப் பிரசமீன்ற தேனிடைக் கரும்பின் சாற்றை) எம்பெருமானுடைய போக்யதை லோகவிக்ஷணமென்று காட்டுதற்காக அபூர்வமானதொரு கரும்பை சிக்ஷிக்கிறார்; தண்ணீர் பாய்ச்சப்பெற்று வளர்கின்ற கரும்பினன சாறு போன்றவனென்றால் சிறிதும் த்ருப்தி பிறவாமையாலே ‘வரையிடைப் பிரசமீன்ற தேனிடைக்கரும்பு‘ என்று புதிதாக வொரு வஸ்துவை வளர்ந்த கரும்பு இருக்குமானால் அதன் சாறு போன்றவ னெம்பெருமான் என்னலாம் என்பது கருத்து. (திருவினை) ‘திரு‘ என்னுஞ் சொல்லால் சொல்லப்படுகிற வள் பிராட்டியாகையாலே அவளைச் சொல்லுகிற சொல்லினால் இங்கு எம்பெருமானைச் சொன்னது திருவுக்குந் திருவாகிய செல்வனென்றபடி. எல்லார்க்கும் மேன்மையைத் தருமவளான பிராட்டிக்கும் தான் மேன்மை தருமவன் என்றவாறு. ஆக இப்படிப்பட்ட எம்பெருமானை மருவி வாழ்ந்து போகலாமாயிருக்க, அந்தோ! அப்பெருமான்றானே வந்து மேல்விழச் செய்தேயும் விலக்கித் தள்ளுபவரான பாவிகளுண்டாவதே! என்று வெறுக்கிறார். (மானிடப் பிறவியந்தோ மதிக்கிலர்) உலகத்தில் பிரமஸ்ருஷ்டி பலவகைப்படும். பூச்சிகளும் புழுக்களும் பறவைகளும் மிருகங்களுமாகப் பிறத்தலே பெரும்பான்மையாகவுள்ளது;

English Translation

The adorable cloud-hued Lord is sweet as sugarcane juice and the honey of the mountainside. Those who do not count his auspicious qualities only waste their precious lives, take it, They only strengthen the misery of their bodily life.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்