விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நிதியினை பவளத் தூணை*  நெறிமையால் நினைய வல்லார்,* 
    கதியினை கஞ்சன் மாளக்*  கண்டுமுன் அண்டம்ஆளும்,*
    மதியினை மாலை வாழ்த்தி*  வணங்கிஎன் மனத்து வந்த,* 
    விதியினைக் கண்டு கொண்ட*  தொண்டனேன் விடுகிலேனே (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கஞ்சன் மாளகண்டு - கம்ஸன் முடிந்துபோம்படி செய்து
அண்டம் - உலகங்களை
ஆளும் - ரக்ஷித்தருளினவனும்
மதியினை - (அடியவர்களை எப்போதும்) நினைத்துக் கொண்டே யிருப்பவனும்
மாலை - அடியார்திறத்தில் வியாமோஹமே வடிவெடுத்தவனும்

விளக்க உரை

உரை:1

வியாமோஹமுள்ளவன் என்ற பல பொருள்களைக் கொண்டது. ”ஆசரலேக்ஷமுடையார்பக்கல் வ்யாமுக்தனாயிருக்குமவனை” என்பது வியாக்கியான வாக்கியம். அடியார்க்கு எத்தனை உபகரணங்கள் செய்திருந்தாலும் ஒன்றும் செய்திலனாகவே தன்னை நினைத்துக்கொண்டு ‘என்செய்வோம், என்செய்வோம்‘ என்றே பாரிப்புக் கொண்டிருக்கையாய்த்து எம்பெருமானுடைய வியாமோஹத்தின் பரிசு. வாழ்த்தி வணங்கி என்மனத்துவந்த விதியினை=‘வணங்கி‘ என்றதை எச்சத் திரிபாகக் கொள்க: வணங்க என்றபடி; நான் வாழ்த்தி வணங்கும்படியாக என் மனத்தே வந்து சேர்ந்தவிதியை என்றவாறு. அன்றியே, “என்மனத்து வந்த விதியினை வாழ்த்தி வணங்கி விடுகிலேன்“ என்று அந்வயிக்கவுமாம். விதி யென்னும் வடசொல் பாக்கியத்தைச் சொல்லும். தம்முடைய பாக்கியமே எம்பெருமானாக வடிவெடுத்ததென்கிறார். ஆக இப்படிப்பட்ட எம்பெருமானை இன்று காணப்பெற்ற அடியேன் இனி விடமாட்டேனென்றோ ராயிற்று.

உரை:2

தாண்டகம் என்பது மலை ஏறுவதற்கு உதவியாக இருக்கும் ஒரு ஊன்றுகோல். மனித ஆன்மாவின் கடைத்தேற்றத்துக்கு கடவுள் ஒருவர் தான் ஊன்றுகோல் என்பதை இப்பாசுரங்கள் விளக்குகின்றன.

English Translation

I have found my treasure, my coral pillar, the Lord who is sole refuge of those who seek him through worship. The one who destroyed Kamsa, the Lord who rules the universe from yore, the adorable one. He is the divinity that enters my heart with love, I worship him, I shall never leave him now.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்