விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வருக வருக வருக இங்கே*  வாமன நம்பீ!  வருக இங்கே* 
    கரிய குழல் செய்ய வாய் முகத்து*  எம்  காகுத்த நம்பீ!  வருக இங்கே*
    அரியன் இவன் எனக்கு இன்று நங்காய்!*  அஞ்சனவண்ணா*  அசலகத்தார்* 
    பரிபவம் பேசத் தரிக்ககில்லேன்*  பாவியேனுக்கு இங்கே போதராயே  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கரிய குழல் - கருநிறமான கூந்தலையும்;
செய்ய வாய் - செந்நிறமான வாயையும் ;
முகத்து - (ஒப்பற்ற) முகத்தையுமுடைய;
காகுத்த நம்பீ - இராமமூர்த்தி;

விளக்க உரை

கீழ்ப்பாட்டில் யசோதையிடம் ஒரு இடைச்சி வந்து ‘உன் பிள்ளையை உன்வசம் அழைத்து வைத்துக்கொள்’ என்று சொல்லவே, யசோதைப்பிராட்டி அவனுடைய நற்குண நற்செய்திகளை யெடுத்துரைத்து ‘இங்கே வா’என்றழைக்க, முறையிட்டுக் கொள்ளவந்து அருகே நிற்குமவள் ‘நீ இப்படிப் புகழ்ந்து அழைக்கலாமோ? அச்சமுறுத்தியன்றோ அழைக்க வேண்டும்’ என்று சொல்ல, யசோதை அதற்கு “இவன் எனக்குச் செல்வப்பிள்ளையாயிற்றே” என்று விடைகூறிவிட்டுக் கண்ணனை நோக்கி ‘அஞ்சனவண்ணா! உன்னைப் பிறர் பழித்துச் சொன்னால் என்னால் காதுகொடுத்துக் கேட்டிருக்க முடியாது; ஆகையால் பிறர் ஒன்றுஞ் சொல்ல இடமில்லாதபடி நீ இங்கே வந்து சேரவேணும்’ என்றழைக்கிறாள். வருக வருக வருக - விரைவுப்பொருளில் மும்முறை வந்த அடுக்கு. கரிய குழற் செய்ய வாய் - முரண்தொடை; “சொல்லினும் பொருளினும் முரணுதல் முரணே.” பாவியேனுக் கென்றது - வெறுப்பினால். அரியன் - நியமநத்துக்கு உட்படிந்து நடக்கமாட்டாதவன் என்றவாறு. பரிபவம் - வடசொல்.

English Translation

“Come here, come here, come here, O Vamana Lord, come here. O Lord Kakuthstha with dark hair and red lips, come here! O Ladies, he is hard to catch for me today! O Dark Lord, I cannot bear to hear the complaints of the neighbours. Come here to this wicked self!”

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்