விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    போது அமர் செல்வக்கொழுந்து*  புணர் திருவெள்ளறையானை* 
    மாதர்க்கு உயர்ந்த அசோதை*  மகன்தன்னைக் காப்பிட்ட மாற்றம்* 
    வேதப் பயன் கொள்ள வல்ல*  விட்டுசித்தன் சொன்ன மாலை* 
    பாதப் பயன் கொள்ள வல்ல*  பத்தர் உள்ளார் வினை போமே  (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மாதர்க்கு உயர்ந்த - ஸ்திரீகளுள் சிறந்த
அசோதை - யசோதைப்பிராட்டி
மகன் தன்னை - தன்புத்ரனான கண்ணனை
காப்பு இட்ட - ரக்ஷையிட அழைத்த
மாற்றம் - வார்த்தையை

விளக்க உரை

ஒரு பாசுரத்தின் ஓரடிக்கு இத்துணை மஹிமை கூறியமுகத்தால் இத்திருமொழியின் பயன் அளவிட்டுச் சொல்லமுடியாதென்பதைக் கைமுதிகந்யாயத்தால் பெறவைத்தார். (பாதப்பயனித்யாதி.) ஒவ்வொரு பாட்டின் கடைசிப்பாதத்தில் கூறியுள்ள காப்பிடலாகிய புருஷார்த்தத்தைக் கைக்கொள்ளக்கடவ பக்தர்களுடைய பாபங்கள் தீருமென்று முரைக்கலாம். அடிவரவு:- இந்திரன் கன்று செப்பு கண்ணில் பல்லாயிரவர் கஞ்சன் கள்ளம் இன்பம் இருக்கு போதமர் வெண்ணெய்.

English Translation

This decade of sings by Vishnuchitta adept in Vedic pursuits recalls the words of Yasoda, excellent among mothers and verily the lotus-dame Lakshmi herself, sung to ward off the evil eye on her son, the resident Lord of Tiruvellari. Devotees who understand the song’s refrain will suffer no Karma.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்