விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    இன்பம் அதனை உயர்த்தாய்!*  இமையவர்க்கு என்றும் அரியாய்!* 
    கும்பக் களிறு அட்ட கோவே!*  கொடுங் கஞ்சன் நெஞ்சினிற் கூற்றே!* 
    செம்பொன் மதில் வெள்ளறையாய்!*  செல்வத்தினால் வளர் பிள்ளாய்! 
    கம்பக் கபாலி காண் அங்கு*  கடிது ஓடிக் காப்பிட வாராய்     

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

இன்பம் அதனை - பரமாநந்தத்தை;
உயர்த்தாய் - (எனக்கு) மேன்மேலுண்டாக்கினவனே;
இமையவர்க்கு - தேவர்க்கு;
என்றும் - எந்நாளும்;
அரியாய் - அருமையானவனே!

விளக்க உரை

அங்கு துர்க்கையென்னும் க்ஷுத்ர தேவதையிருப்பதனால் அவ்விடத்தைவிட்டு நான் காப்பிடும்படி விரைந்து வரவேணுமென்பதாம். கபாலி - ருத்ரனென்றுமாம். இனி, உடம்பு நிறையச் சாம்பல் பூசி எலும்புகளை மாலையாகக் கட்டியணிந்து கையில் கபாலங்கொண்டு பிச்சையெடுப்பவர் இரவிற் பிச்சை யெடுத்தத் திரிவது முற்காலத்தியற்கையாதலால் அப்படிப்பட்டவர்களை ‘கபாலி, என்றதாகவுமாம்; அப்படியிருப்பவர்களைக் கண்டு குழந்தைகள் அஞ்சுமென்று அழைத்தல் இயல்பு.

English Translation

O Lord giving manifold pleasures, Lord evading the celestials, Lord who killed the rutted elephant, Lord who spelt death in evil Kamsa’s heart, Lord residing in gold walled Vellarai! O Child growing up in affluence! Look, there is a skull-holder hiding behind the pillar there. Come running quickly and let me ward off the evil eye.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்