விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கள்ளச் சகடும் மருதும்*  கலக்கு அழிய உதைசெய்த* 
    பிள்ளையரசே!*  நீ பேயைப் பிடித்து முலை உண்ட பின்னை* 
    உள்ளவாறு ஒன்றும் அறியேன்*  ஒளியுடை வெள்ளறை நின்றாய்!*
    பள்ளிகொள் போது இது ஆகும்*  பரமனே!  காப்பிட வாராய்   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கள்ளம் - வஞ்சனையுடைய
சகடும் - சகடாஸுரனையும்
மருதும் - யமளார்ஜுநங்களையும்
கலக்கு அழிய - (வடிவம்) கட்டுக்குலைந்தழியும்படி
உதை செய்த - (திருவடிகளால்) உதைத்துத் தள்ளிய

விளக்க உரை

‘’பேய்ச்சிமுலையுண்ட பின்னை இப்பிள்ளையைப் பேசுவதஞ்சுவனே” என்ற பெரிய திருமொழிப் பாசுரத்தோடு இப்பாட்டின் இரண்டு ­மூன்றாமடிகளை ஒருபுடை ஒப்பிடுக. பார்த்தால் சிறுவன் போலிருக்கின்றாய், நீ செய்யும் செய்கையோ அதிமாநுஷம், ஆகையால் உனது உண்மையான ஸ்வரூபம் என்னாலறியப்போகிறதில்லை யென்கிறாள்.

English Translation

O Lord residing in bright and beautiful Vellarai! O Child-king who destroyed the cart and the twin Arjuna trees! After you drank the milk from the ogress Putana’s breast, I cannot understand things as they really are. It is bed time now. Come, let me ward off the evil eye.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்