விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கஞ்சன் கறுக்கொண்டு நின்மேல்*  கரு நிறச் செம் மயிர்ப் பேயை* 
    வஞ்சிப்பதற்கு விடுத்தான்*  என்பது ஓர் வார்த்தையும் உண்டு* 
    மஞ்சு தவழ் மணி மாட*  மதிற் திருவெள்ளறை நின்றாய்! 
    அஞ்சுவன் நீ அங்கு நிற்க*  அழகனே!  காப்பிட வாராய்

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கஞ்சன் - ‘கம்ஸனானவன்
நின்மேல் - உன்மேலே,
கறுக்கொண்டு - கோபங்கொண்டு
கருநிறம் - கருநிறத்தையும்
செம்மயிர் - செம்பட்ட மயிரையுமுடைய

விளக்க உரை

கம்ஸன் ஆகாசவாணி சொன்னதைக் கேட்டதுமுதல் தேவகியின் கருப்பம் பிறந்ததும் அப்போதைக்கப்போது அழித்து வருகையில் உனது யோகநித்திரையாற் பிறந்த கன்னிகையைக் கொல்ல முயன்றபோது அக்கன்னிகை ‘உன்னைக் கொல்லப் போகிறவன் ஒளித்து வளர்கின்றான், என்று சொல்லியதைக் கேட்டது முதல் உன் மேல் கோபங்கொண்டவனாய் உன்னை வஞ்சனையாலழிப்பதற்குத் தாய் வடிவத்தோடு போகும்படி பேய்மகளாகிய பூதனையை ஏவினானென்று லோகப்ரவாதமிருக்கிறது; ஆகையால், அவன் உன்னைக்கொல்ல இன்னும் யாரையேனும் ஏவக்கூடும்; எனக்கு அச்சமாயிருக்கிறது; ஆகவே, நீ அவ்விடத்து நின்றும் நான் அந்திக் காப்பிட இங்கு வரவேணுமென்பதாம்.

English Translation

O Lord residing in Vellarai where walls and mansions touch the clouds! Word goes around that kamsa has set his anger on you and sent a black ogress with red hair to kill you. If fear when you stand there by yourself. O Beautiful one, come here, let me ward off the evil eye.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்