விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கண்ணில் மணல்கொடு தூவிக்*  காலினால் பாய்ந்தனை என்று என்று* 
    எண் அரும் பிள்ளைகள் வந்திட்டு* -இவர் ஆர்?- முறைப்படுகின்றார்* 
    கண்ணனே!  வெள்ளறை நின்றாய்!*  கண்டாரொடே தீமை செய்வாய்! 
    வண்ணமே வேலையது ஒப்பாய்!*  வள்ளலே! காப்பிட வாராய்        

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கண்டாரோடே - கண்டவரோடெல்லாம்;
தீமை செய்வாய் - தீம்பு செய்பவனே;
வண்ணம் - திருமேனி நிறம்;
வேலை அது - கடலின் நிறத்தை;
ஒப்பாய் - ஒத்திருக்கப் பெற்றவனே;
வள்ளலே - உதாரனே;

விளக்க உரை

‘நாங்கள் கண்ணை விழித்து விளையாட வொண்ணாதபடி இந்த கிருஷ்ணன் எங்கள் கண்ணிலே மண்ணைத் தூவியும், நீ ஏன் எங்கள் கண்ணிலே மண்ணைத் தூவினாயென்று நாங்கள் கேட்கக் காலினாலுதைத்தும் போனான், என்றிப்படி இவ்வூரிலுள்ள பிள்ளைகள் ஒருவரிருவர் அல்லாமல் மிகப்பலர் வந்து என்னிடத்தில் முறையிட்டுக் கொள்ளுகிறார்கள்; ஆதலால் நீ அங்கு போகாமல் நான் காப்பிடும்படி வரவேணுமென்கிறாள். கண்டாரோடே தீமை செய்வாய் = உன்னிடம் அன்புள்ளவர்களாய் நீ செய்தவற்றைப் பொறுக்குமவர்களிடத்தில் மாத்திரமல்லாமல் யாவரிடத்துமட் தீமை செய்கிறாயே! என்றவாறு. ‘‘தீமை செய்வாய்! வண்ணம் வேலையதொப்பாய்,, என்றது - நீ தீம்பு செய்தாலும் உன்னை விடமுடியாதபடி யிருக்கிறது உனது வடிவழகு என்றபடி. வேலையது = அது - முதல் வேற்றுமைச் சொல்லுருபு.

English Translation

My Krishna, Lord of Vellarai, dark as the ocean, benevolent one! You play mischief with all and sundry. Countless children have come and complained, “He threw sand in our eyes”, “He kicked us”, and such other things. Come, let me ward off the evil eye.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்