விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    குடங்கள் எடுத்து ஏற விட்டுக்*  கூத்தாட வல்ல எம் கோவே!* 
    மடம் கொள் மதிமுகத்தாரை*  மால்செய வல்ல என் மைந்தா!* 
    இடந்திட்டு இரணியன் நெஞ்சை*  இரு பிளவு ஆக முன் கீண்டாய்!* 
    குடந்தைக் கிடந்த எம் கோவே!*  குருக்கத்திப் பூச் சூட்ட வாராய்.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கூத்து ஆட - குடக்கூத்தை யாடுவதற்கு
வல்ல - ஸாமர்த்தியமுடைய
எம் கோவே - எம்முடைய தலைவனே
மடம் கொள் - மடப்பமென்ற குணத்தையுடைய
மதி முகத்தாரை - சந்த்ரன் போன்ற முகத்தையுடைய பெண்களை
மால் செய்ய வல்ல - மயக்கவல்ல

விளக்க உரை

உரை:1

நரஸிம்ஹாவதாரம் முதலிய மற்றுமுள்ள விபவாவதாரங்கள் செய்தவனும் திருக்குடந்தை முதலிய திவ்ய தேசங்களில் வாழ்பவனும் இக்கண்ணபிரானே யென்பது இதில் விளங்கும். குடக்கூத்து - ப்ராஹ்மணர்க்குச் செல்வம் விஞ்சினால் யாகஞ்செய்வது போல இடையர்க்குச் செல்வம் விஞ்சினால் அதனாலுண்டாகுஞ் செருக்குக்குப் போக்குவீடாக அவர்களாடுவதொரு கூத்து; இதனைத் தலையிலே அடுக்குங் குடமிருக்க இருதோள்களிலும் இருகுடங்களிருக்க இருகையிலுங் குடங்களை யேந்தி ஆகாசத்திலே யெறிந்து ஆடுவதொரு கூத்து என்பர்; இதனைப் பதினோராடலிலொன்றெனறும் அறுவகைக் கூத்திலொன்றென்றுங் கூறி “குடத்தாடல் குன்றெடுத்தோனாடலலனுக் கடைக்குப வைந்துறுப்பாய்ந்து” என்றுமேற்கோளுங்காட்டினர் சிலப்பதிகாரவுரையில் அடியார்க்கு நல்லார்.

உரை:2

சந்திரன் போன்ற முகமுள்ள பெண்களை மயங்கச் செய்வதில் கண்ணன் வல்லவன்  என்று பொருள்பட பெரியாழ்வார் யசோதையின் நிலையிலிருந்து பாடுகிறார்.

English Translation

My king, deft in juggling with pots thrown in the air! My Prince, infatuating the coy moon-faced girls! Long ago you ripped Hiranya’s chest into two. My Lord reclining in Kudandai, come wear these Kurukatti flowers.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்