விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    செருநீர வேல்வலவன்*  கலிகன்றி மங்கையர்கோன்*
    கருநீர் முகில்வண்ணன்*  கண்ண புரத்தானை*
    இருநீர்இன் தமிழ்*  இன்இசை மாலைகள் கொண்டுதொண்டீர்* 
    வரும்நீர் வையம்உய்ய*  இவைபாடி ஆடுமினே.   (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மங்கையர் கோன் - திருமங்கையிலுள்ளார்க்கு அரசருமான
கலிகன்றி - ஆழ்வார் (அருளிச்செய்த)
இரு நீர் - மிக்க நீர்மையையுடைய
இன் தமிழ் - இனிய தமிழினாலாகிய
இன் இசை - இனிய இசையையுடைய

விளக்க உரை

கவத்பக்திமிகுந்து தொண்டர்களென்று பெயர் பெற்றவர்களை விளி்த்து, நீங்கள் இத்திருமொழியைப் பாடியாடுங்கோள்; உலகமெல்லாம் உஜ்ஜீவிக்கும் – என்றாராயிற்று. வருநீர்வையம் – கடல் சூழ்ந்த பூமியிலே, உய்ய – நீங்கள் உஜ்ஜீவிக்கும்படி, இவைபாடி யாடுமின் என்னவுமாம்.

English Translation

This is a garland of sweet Tamil songs sung with feeling by sharp-spear-wielding Mangai-king kalikanri on the Lord of kannapuram, dark as the water lily. Devotees! sing them and dance let the ocean-girdled Earth be filled with joy.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்