விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கற்றார் பற்றுஅறுக்கும்*  பிறவிப் பெருங்கடலே*
    பற்றா வந்து அடியேன்*  பிறந்தேன் பிறந்தபின்னை*
    வற்றா நீர்வயல்சூழ்*  வயல்ஆலி அம்மானைப்-
    பெற்றேன்*  பெற்றதுவும்*  பிறவாமை பெற்றேனே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வயலாலி - ‘வயலாலி’ என்றேபெயர் பெற்ற திருவாலியில் எழுந்தருளியிருக்கிற
அம்மானை - எம்பெருமானை
பெற்றேன் - ப்ராப்தனானேன்,
பெற்றதுவும் - அவனைப்பெற்றவாறே
பிறவாமை பெற்றேன் - மறுபிறப்பில்லாமை பெற்றேன்

விளக்க உரை

தன்னை மறக்கமுடியாதபடி எம்பெருமான் உமக்குப் பண்ணித்தந்த உபகாரந்தான் ஏதென்ன, தன்னுடைய அநுபவத்துக்கு இடையூறு வராதபடி பண்ணித்தந்த மஹோபகாரகனன்றோ வென்கிறார். “பிறவாமைப் பெற்றேனே” என்பதற்குப் பலபடி பொருளருளிச் செய்வர்; பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியானங் காண்மின் – “இப்பேற்றுக்கு விச்சேதத்தைப் பண்ணக்கடவ ஜன்மம் மறுவலிடாதபடி பெற்றேனென்னுதல்; அன்றிக்கே இப்பேற்றுக்கடியாக என்பக்கல் ஒரு நன்மை பிறவாதிருக்கச் செய்தே பெற்றேனென்னுதல்; அங்ஙனுமன்றிக்கே, பெற்றேனென்னும் உபகார ஸ்ம்ருதியும் வர்த்தியாதபடி பெற்றேனென்னுதல். உபகாரஸ்ம்ருதி அநுவர்த்தித்தவன்று ப்ரத்யுபகாரம் தேடி நெஞ்சாறல்பட வேண்டும்படி யிருக்குமிறே; அது வேண்டாதே ‘ப்ராப்தம் இது’ என்றிருக்கும்படி உபகரித்தானாயிற்று.” என்று. இனிப் பிறப்பில்லாமையைப் பெற்றேன் என்பது முதல் அர்த்தம்; (என்னிடத்தில் ஒரு ஹேதுவும்) பிறவாமல் பேறுபெற்றேன் என்பது இரண்டாவது அர்த்தம்; நன்றியறிவும் பிறவாமலே பேறுபெற்றேன் என்பது மூன்றாவது அர்த்தம்.

English Translation

I took birth in a vast ocean of nescience, with no love for the learned ones. Then when I was born again, the Lord of fertile Vayalali gave me his grace, and freed me from rebirth.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்