விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கண்டார் பழியாமே*  அக்காக்காய் கார்வண்ணன்!* 
    வண்டு ஆர் குழல்வார*  வா என்ற ஆய்ச்சி சொல்*
    விண் தோய் மதில்*  வில்லிபுத்தூர்க் கோன் பட்டன் சொல்* 
    கொண்டாடிப் பாடக் குறுகா வினை தாமே! (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அக்காக்காய் - ‘காக்கையே;
கண்டார் - பார்த்தவர்கள்;
பழியாமே - பழியாதபடி;
கார்வண்ணன் - காளமேகம் போன்ற நிறமுடைய கண்ணனுடைய;
வண்டு ஆர் குழல் - வண்டை ஒத்த கரிய கூந்தலை;

விளக்க உரை

(கண்டார்பழியாமே.) நீராடிய பின்பு தலையை விரித்துக் கொண்டிருந்தால், கண்டவர்கள் எல்லாம் பழிப்பர்களிறே. நல்வினையும் தீவினை போலவே ஸம்ஸாரத்தில் பந்தத்தைத்தந்து பொன்விலங்கு போலுதலால். முமுகூஷுக்கள் இரும்பு வில்லையொத்த பாபத்தை நீக்குவது போலவே புண்யத்தையும் நீக்க வேண்டுமென்பது கருதி ‘குறுகாவினை தாமே’ எனப் பன்மையாக அருளிச் செய்தன ரென்க. அடிவரவு:– பின்னை பேய் திண்ணம் பள்ளத்தில் கற்று கிழக்கில் பி்ண்டம் உந்தி மன்னன் கண்டார் வேலி.

English Translation

These songs of sky-high walled Villiputtur’s King Pattarbiran recall Yasoda’s call to the raven to come and comb the bee-humming coiffure of the dark hued Lord, lest onlookers speak ill. Those who sing it with joy will be rid of evil Karmas.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்