விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வையம் எல்லாம் பெறும் வார்கடல் வாழும்*  மகரக்குழை கொண்டுவைத்தேன்* 
    வெய்யவே காதில் திரியை இடுவன்*  நீ வேண்டிய தெல்லாம் தருவன்*
    உய்ய இவ் ஆயர் குலத்தினில் தோன்றிய*  ஒண்சுடர் ஆயர்கொழுந்தே* 
    மையன்மை செய்து இள ஆய்ச்சியர் உள்ளத்து*  மாதவனே! இங்கே வாராய்

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

உய்ய - (நாங்களெல்லாம்) உஜ்ஜீவிக்கும்படி;
இ ஆயர் குலத்தினில் தோன்றிய - இந்த இடையர் குலத்திலே வந்து பிறந்த;
ஒன் சுடர் - மிக்க ஒளியையுடைய;
ஆயர் கொழுந்தே - இடையர்களின் கொழுந்து போன்றவனே!;
வையம் எல்லாம் பெறும் - இந்தவுலகங்களையெல்லாம் (தனக்கு) விலையாகக் கொள்ளக்கூடிய;

விளக்க உரை

நீ இப்போது திரியையிட்டுக்கொண்டால் பின்பு பொற்கடிப்பு மாத்திரமல்ல மிகச்சிறந்த மகாகுண்டலங்களையும் அணியலாம்; காது தினவு தின்னாமலிருக்க வெப்பமாகவே திரியையிடுவேன்; உனக்கு வேண்டிய பணியாரங்களையும் பழங்களையும் தருவேன்; நீ வரவேணும் என்று சொல்லி யழைக்கிறாள். வெப்பு தினவுக்குப் பரிஹாரமாதலால் ‘வெய்யவே காதில் திரியையிடுவேன்’ என்றாள்.

English Translation

O Madhava! O Radiant child born to deliver this cowherd clan! I have brought for you these ear-pendants in the shape of the deep-sea Makara fish, which all the world raves about. You infatuate young

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்