விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    சிந்தனையை தவநெறியை*  திருமாலை*  பிரியாது- 
    வந்து எனது மனத்து இருந்த*  வடமலையை வரி வண்டு ஆர்-
    கொந்து அணைந்த பொழில் கோவல்*  உலகு அளப்பான் அடி நிமிர்த்த-
    அந்தணனை*  யான் கண்டது*  அணி நீர்த் தென் அரங்கத்தே.        

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வந்து - எழுந்தருளி
எனது மனத்து - என்னுடைய நெஞ்சிலே
பிரியாது இருந்த - ஒரு நொடிப்பொழுதும் விட்டுப்பிரியாமல் எழுந்தருளியிருப்பவனும்,
வரி வண்டு ஆர் - அழகிய வண்டுகள் படிந்த
கொந்து - பூங்கொத்துக்கள்
அணைந்த - நெருங்கியிருக்கப்பெற்ற

விளக்க உரை

சிந்தனையை = “ஒழிவில்காலமெல்லா முடனாய்மன்னி வழுவிலா வடிமை செய்ய வேண்டுநாம்” என்றாற்போலே உண்டாகிற கைங்கரிய மனோரதங்களுக்கு இலக்கானவன் எம்பெருமானிறே. தவநெறியை = மநோரதித்தபடியே கைங்கர்ய ஸாம்ராஜ்யத்தைப் பெறுவிக்கும் உபாயபூதனும்தானே என்கை. கஜேந்திராழ்வான் கமலபுஸ்பார்ச்சகையாகிற கைங்கரியத்தைப் பண்ணப் பாரித்தும் அவனுடைய முயற்சி பயன்படவில்லையே; எம்பெருமானேயன்றோ பிரதிபந்தகநிவ்ருத்தியைச்செய்து கைங்கரியத்தை நிறைவேற்றுவித்துக்கொண்டான். ஆகையாலே உபாயமும் அவனே யென்கிறது. அந்தணன் - அழகிய தண்மை பொருந்தியவன்; பரமதயாளு என்றபடி…

English Translation

The source of thought, the path of penance, the Lord of Sri, the resident of Northern Venkatam hills, the stealer of my heart-space, the Earth-straddling Vedic Student, the Lord of bee-humming fragrant groved Tirukkovolour, -I have seen him in Southern Arangam amid cool waters.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்