விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வளர்ந்தவனைத் தடங் கடலுள்*  வலி உருவில் திரி சகடம்* 
    தளர்ந்து உதிர உதைத்தவனை*  தரியாது அன்று இரணியனைப்- 
    பிளந்தவனை*  பெரு நிலம் ஈர் அடி நீட்டிப்*  பண்டு ஒருநாள் 
    அளந்தவனை*  யான் கண்டது*  அணி நீர்த் தென் அரங்கத்தே.  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தளர்ந்து உதிர உதைத்தவனை - கட்டுக்குலைந்து சிந்நாபிந்நமாகும்படி (அதனைத்) திருவடியால் உதைத்தவனும்
அன்று தரியாது இரணியனை பிளந்தவனை - ஒருகாலத்தில் பொறுத்திருக்கமாட்டாமல் இரண்யாசுரனைக் கிழித்துப்போட்டவனும்,
பண்டு ஒருகால் - மற்றுமொருகாலத்தில்
ஈர் அடி நீட்டி - இரண்டு திருவடிகளைப் பரப்பிவைத்து
பெருநிலம் அளந்தவனை - விசாலமான பூமியை யெல்லாம் அளந்து கொண்டவனுமான பெருமானை

விளக்க உரை

இரண்டாமடியில் ‘உதிர’ என்றும் ‘அதிர’ என்றும் பாடபேதமுண்டு; அதிர – அதிர்ச்சியுண்டாம்படி. தரியாது – தன்விஷயத்திலே எத்தனை தீங்குசெய்தாலும் தரித்திருப்பன் எம்பெருமான்; தனது உயிர்நிலையான அடியவர் திறத்தில் தீங்கு செய்தால் ஒருநொடிப்பொழுதும் தரித்திருக்கமாட்டானென்க.

English Translation

The Lord who reclines in the ocean, the Lord who smote a bedevilled cart to smithers, the one who tore Hiranya's chest, the one who came as a manikin, then grew and took the Earth, -I have seen him in Southern Arangam amid cool waters.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்