விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கைம்மான மழ களிற்றை*  கடல் கிடந்த கருமணியை* 
    மைம்மான மரகதத்தை*  மறை உரைத்த திருமாலை* 
    எம்மானை எனக்கு என்றும் இனியானை*  பனி காத்த 
    அம்மானை*  யான் கண்டது*  அணி நீர்த் தென் அரங்கத்தே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மறை உரைத்த திருமாலை - வேதங்களாலே பிரதிபாதிக்கப்பட்ட ச்ரியபேதியானவனும்
எம்மானை - எனக்கு ஸ்வாமியானவனும்
எனக்கு என்றும் இனியானை - எனக்கு எக்காலத்திலும் போக்யனா யிருப்பவனும்
பனி காத்த அம்;மானை - மழையில் நின்றும் (ஆநிரையைக்) காத்தருளினவனுமான பொருமானை
யான் கண்டது - அடியேன் ஸேவிக்கப்பெற்றது (எவ்விடத்திலென்னில்

விளக்க உரை

ஆழ்வார் கீழ்த்திருமொழியில் பட்ட வ்யதைமெல்லாத் தீர்ந்து மகிழ்ந்து பேசுந்திருமொழியாயிற்று இது என்னாதனைத் திருவரங்கத்தில் காணப்பெற்றேன் என்கிறார். கைம்மான மழகளிற்றை = ஓர் ஆனை கைகளையும் கால்களையும் பரப்பிக்கொண்டு கிடப்பதுபோலப் பள்ளிகொண்டிருக்கும் அழகில் ஈடுபட்டுச் சொல்லுகிறபடி. நீண்ட துதிக்கையை யுடையதாய்ப் பருவத்தாலே இளையதாயிருப்பதொரு ஆனை சாய்ந்தாற்போலே யிருக்கின்றவனையென்கை. “களிறுபோன்றவனை” என்னாது களிற்றை என்றது ஐக்கியமாகச் சொன்னது உவமையாகுபெயர். கடல்கிடந்த கருமணியை – ஒரு நீலரத்னம் சாய்ந்தாற்போலே திருப்பாற்கடலிலே கிடந்தவனை என்கை. மைம்மான மரதகத்தை – பசுமை, நீலம், கருமை என்ற நிறங்களை அபேதமாகக் கூறுவது கவி மரபாதலால் எம்பெருமானுடைய காளமேகத் திருவுருவத்திற்குக் கருமணியையும் மரதகத்தையும் உவமை கூறினர். மறையுரைத்த என்பதற்கு – ‘வேதங்களை உபதேசித்தருளின’ என்றும் வேதங்களால் பிரதிபாதிக்கப்பட்ட’ என்றும் இரண்டுவகையாகப் பொருள் ஆகும். பிந்தினபொருள் பாங்கு

English Translation

The elephant cub, that black gem who reclines in the ocean, the dark emerald, the Vedic Lord, my master, my always-sweet-to-me-Lord, the Lord who stopped a hailstorm, -I have seen him in Southern Arangam amid cool waters.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்