விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    உந்திமேல் நான்முகனைப் படைத்தான்*  உலகு உண்டவன்
    எந்தை பெம்மான்*  இமையோர்கள் தாதைக்கு இடம் என்பரால்*
    சந்தினோடு மணியும் கொழிக்கும்*  புனல் காவிரி* 
    அந்திபோலும் நிறத்து ஆர் வயல் சூழ்*  தென் அரங்கமே.          

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

சந்தினோடு மணியும் கொழிக்கும் - சந்தனக்கட்டைகளையும் நவரத்னங்களையும் தள்ளிக்கொண்டு பெருகுகின்ற
புனல் - தீர்த்தத்தை யுடைத்தான
காவிரி - திருக்காவிரி நதியாலும்
அந்தி போலும் நிறத்து ஆர் வயல் - ஸந்தியாகாலம் போன்ற வர்ணத்தையுடைய கழினிகளினாலும்
சூழ் - சூழப்பட்ட

விளக்க உரை

அந்திபோலும் நிறத்தார் வயல் = அந்தி யென்றது ஸாயம் ஸந்தியாகாலத்தை: அது இருள்மூடிக் கறுத்துத் தோற்றுமாதலால் “கருநெல்சூழ் கண்ணமங்கை” என்னுமாபோலே கருவடைந்த பயிர்களாலே வயல்கள் கறுத்துத் தோன்றுகின்றனவாம். இனி, ஸாயம் ஸந்தியாகாலத்தைச் செந்நிறமாக வருணிப்பர்களாதலால் அதற்குச் சேரப்பொருள் கொள்ள வேண்டில் ‘நுனிநெல் பழுத்த வயலாலே சூழப்பட்ட’ என்றுரைத்துக்கொள்க.

English Translation

Oh, they say the Southern Arangam, -Surrounded by sunset-hued golden fields and swiftly-flowing Kaveri waters that heap Sandalwood and gems, -is the abode of the Lord who created the creator on his navel, the Lord who swallowed the worlds, the Lord who is the patriarch of gods, the Lord who is my futelar deity.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்