விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    முன் இவ் ஏழ் உலகு உணர்வுஇன்றி*  இருள் மிக உம்பர்கள் தொழுது ஏத்த* 
    அன்னம் ஆகி அன்று அரு மறை பயந்தவனே!*  எனக்கு அருள்புரியே,
    மன்னு கேதகை சூதகம் என்று இவை*  வனத்திடைச் சுரும்பு இனங்கள்* 
    தென்ன என்ன வண்டு இன் இசை முரல்*  திருவெள்ளறை நின்றானே.      

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வனத்து இடை - சோலைகளின் நடுவே
சுரும்பு இனங்கள் - ‘சுரும்பு’ என்னுஞ்சாதி வண்டுகளின் கூட்டம்
தேன்ன என்ன - ‘தென்னதென்ன’ என்றுபாட,
வண்டு - (சாதாரண) வண்டுகளானவை
இன் இசை முரல் - இனிமையான இசைப் பாட்டுக்களைப் பாடாநிற்கப்பெற்ற

விளக்க உரை

சுரும்பு என்பதும் வண்டு என்பதும் பரியாயமென்று பலர் நினைத்திருப்பதுண்டு: பரியாயமென்று கொள்ளலாமாயினும் ஜாதிபேதமுண்டு. இதனை யறியாமல், இப்பாட்டில் மூன்றாமடியில் ‘சுரும்பினங்கள்’ என்று வந்திருக்க, மீண்டும் நான்காமடியில் ‘வண்டு’ என வருவது ஒவ்வாதென்றெண்ணிச் சிலர் பாடத்தை மாறுபடுத்தினர் – “தென்னதென்னவென்றின்னிசை முரல்” எனத் திருத்தினர். அதுவேண்டா; “தென்னவென்ன, வண்டின்னிசை முரல்” என்ற ஆன்றோர்பாடமே கொள்ளத்தக்கது. சுரும்பு சாதி வேறு, வண்டுசாதிவேறு என்க. கீழ் (5-1-1) “அறிவதரியான்” என்ற பாட்டில் “நறிய மலர்மேல் சுரும்பாதுக்க…சிறை வண்டிசைபாடும்” என வந்ததும் குறிக்கொள்ளத்தக்கது. கேதகை, சூதகம் - வடசொல் விகாரங்கள்

English Translation

O Lord residing in Tiruvellarai, amid screwpine-lined fields and Mango orchards where bees hum "Tena Tena' and bumble-bees sing songs over the drone! In the yore when the seven worlds were enveloped by the darkness of ignorance, you came as a swan worshipped by the celestials, and created the precious Vedas. Pray grace me!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்