விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வென்றி மா மழு ஏந்தி முன் மண்மிசை மன்னரை*  மூவெழுகால் 
    கொன்ற தேவ*  நின் குரை கழல் தொழுவது ஓர் வகை*  எனக்கு அருள்புரியே*
    மன்றில் மாம் பொழில் நுழைதந்து*  மல்லிகை மௌவலின் போது அலர்த்தி* 
    தென்றல் மா மணம் கமழ்தர வரு*  திருவெள்ளறை நின்றானே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தென்றல் - தென்றல் காற்றானது
மன்றில் மாம் பொழில் நுழைதந்து - இடைவெளிகளிலே யுள்ள மாந்தோப்புகளிலே நுழைந்தும்
மல்லிகை போது மௌவலின் போது அலர்த்தி - மல்லிகைப் பூக்களையும் முல்லைப் பூக்களையும் மலரச்செய்தும்
மா மணம் கமழ்தர வரு - மிக்க பரிமளம் வீச வந்துலாவப் பெற்ற
திரு வெள்ளறை - திருவெள்ளறையிலே

விளக்க உரை

இத்திருமொழியில் பாசுரங்கள் தோறும் ‘அருள் புரியே’ என்று அருளைவேண்டுகின்றார்; பிரானே! உனது திருவடித் தாமரைகளில் எனக்குப் பரிபூர்ணமான பக்திப்பெருங்காதல் உண்டாகும்படியும் உனக்கு நான் அத்தாணிச் சேவகஞ் செய்து கொண்டு போது போக்கும்படியும் கிருபை பண்ணியருளவேணு மென்று பிரார்த்தித்தல் இத்திருமொழியின் ப்ரமேயம். வெள்ளறை – வெண்மையான பாறைகளாலியன்ற மலை; (அறை – பாறை.) இத்தலம், வடமொழியில் ‘ச்வேதாத்ரி’ எனப்படும்.

English Translation

O Lord residing in Tiruvellarai, where the breeze blows through the Mango orchards, over blossoming Jasmine and Mullai buds, wafting fragrance everywhere! Then in the yore, you wielded on axe and felled twenty one kings who ruled the Earth! Pray show me a way to attain your feet.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்