விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தக்கன் வேள்வி*  தகர்த்த தலைவன்*
    துக்கம் துடைத்த*  துணைவர் ஊர்போல்*
    எக்கல் இடு*  நுண் மணல்மேல்*  எங்கும்
    கொக்கின் பழம் வீழ்*  கூடலூரே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

துக்கம் துடைத்த - துயரத்தைப் போக்கின
துணைவர் - ஆபத்பந்துவான பெருமானுடைய
ஊர் - திவ்யதேசம்;
எக்கல் இடு - வண்டல்படிந்த
நுண் மணல் மேல் எங்கும் - நுட்பமான மணல்களுள்ளவிடமெங்கும்

விளக்க உரை

சங்கரன் கொண்ட சாபத்தைத் தீர்த்த பெருமான் வாழுமிடம் திருக்கூடலூர். (எக்கல் இத்யாதி.) வண்டலிட்ட நுண்ணிய மணல்களில் மாம்பழங்கள் விழுந்து வரிசையாகக் கிடக்கிறபடியைப் பார்த்தால் பழுக்கைக்குப் பதித்துவைத்தாற் போன்றுள்ள தென்னலாம்.

English Translation

Siva who destroyed the Daksha-sacrifice found a comforting superior in the Lord, he resides in kudalur where raw Mangos dropping from trees ripen in the cosy sand dunes of the river everywhere.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்