விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கடு விடம் உடைய காளியன் தடத்தைக்*  கலக்கி முன் அலக்கழித்து* 
    அவன்தன் படம் இறப் பாய்ந்து பல் மணி சிந்தப் பல் நடம் பயின்றவன் கோயில்*
    பட அரவு அல்குல் பாவை நல்லார்கள் பயிற்றிய நாடகத்து ஒலி போய்* 
    அடை புடை தழுவி அண்டம் நின்று அதிரும்*  திருவெள்ளியங்குடிஅதுவே. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

முன் கடு விடம் உடைய காளியன் தடத்தை கலக்கி - முன்பொருகால், மிகக் கொடிதான விஷத்தையுடைத்தான காளியநாகம் கிடந்த பொய்கையைக் கலங்கச்செய்து (அந்த நாகத்தை)
அலக்கழித்து - வருந்தும்படிபண்ணி
அவன் தன் படம் இற பாய்ந்து - அக்காளியனுடைய படங்களானவை முறியும்படியாக (கடம்ப மரத்தினின்று பாய்ந்து)

விளக்க உரை

அடைபுடை=அடை – அடுத்திருக்கிற, புடை – பக்கங்களிலெல்லாம் என்று பொருளுரைக்கப்பட்டது. பெரியவாச்சான்பிள்ளை யருளிய வியாக்கியானத்தில் “ (அடைபுடைதழுவி) அஹோராத்ர மணைந்து ஆகாசத்திலே நின்று கோஷியா நிற்குமாய்த்து” என்று காணப்படுதலால் “அடைபுடை” என்பதற்கு ‘இரவும் பகலும்’ என்று பொருள் கொள்ளப்பட்டதாகத் தெரிகின்றது; இச்சொல் இப்பொருளில் சில நாடுகளில் வழங்கப்படுவதாக இருந்ததுபோலும்.

English Translation

He who in yore went and disturbed the terrible venom-spitting Kaliya's water haunt, leapt on his many heads, dancing his feet on it, spilling the gems from it, lives where thin-like-the-serpent-waisted good dames there practise the art of good dancing, the sound of their ensemble fills everywhere in Tiruvelliyangudi, that is it!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்