விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மின் அனைய நுண் இடையார்*  விரி குழல்மேல் நுழைந்த வண்டு* 
    இன் இசைக்கும் வில்லிபுத்தூர்*  இனிது அமர்ந்தாய்! உன்னைக் கண்டார்*
    என்ன நோன்பு நோற்றாள் கொலோ*  இவனைப் பெற்ற வயிறு உடையாள்* 
    என்னும் வார்த்தை எய்துவித்த*  இருடிகேசா! முலை உணாயே (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மின் அனைய - மின்னலையொத்த;
நுண் - ஸூக்ஷ்மமான;
இடையார் - இடையையுடைய பெண்களின்;
விரிகுழல் மேல் - விரிந்த (பரந்த) கூந்தலின்மேல்;
நுழைந்த - (தேனை உண்ணப்) புகுந்த;

விளக்க உரை

உரை:1

(என்ன நோன்பித்யாதி) ரூபணசேஷ்டி தாதிகளாலே இப்படி லோகவிலக்ஷ்ணனாயுள்ள இப்பிள்ளையைப் பெற்றாளும் ஒருத்தியே! அவள்தான் பூர்வஜந்மத்தில் நோற்ற நோன்பு என்னோ! என்று என்னைப் பலரும் கொண்டாடும்படி பிறந்தவனே! என்று யசோதை கண்ணனை தன்வசப்படுத்தமைக்காகப் புகழ்ந்து கூறுகிறபடி. ஹ்ருஷீகேசன் - (ரூபகுணாதிகளாலே) ஸர்வேந்த்ரியங்களையும் கவருமவள்.

உரை:2

மின்னல் போன்ற நுட்பமான இடையையும் வண்டுகள் உட்கார்ந்து இனிய ரீங்காரம் செய்யும் பரந்த கூந்தலையும் உடைய பெண்கள் வாழும் ஸ்ரீவில்லிபுத்தூரிலே எழுந்தருளியியவனே உன்னை காண்பவர்கள் "இவனைப் பெற்றவள் என்ன நோன்பு நோற்றாளோ?" என்று புகழ்வதைக் கேட்கும்படி செய்த காதல் மகனே(இருடிகேசா), பால் அருந்தவா. என்கிறார்.

English Translation

O Lord Hrisikesa residing sweetly in Srivilliputtur! Bees hover over your coiffure flowers and hum sweetly. People who see you wonder what penance your mother did you beget you. Such is the credit y

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்