விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கான் ஆர் கரிக் கொம்பு*  அது ஒசித்த களிறே!* 
    நானாவகை*  நல்லவர் மன்னிய நாங்கூர்த்*
    தேன் ஆர் பொழில் சூழ்*  திருவெள்ளக்குளத்துள்* 
    ஆனாய் அடியேனுக்கு அருள்புரியாயே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நானாவகை நல்லவர் - (குலம் கல்வி முதலிய) பலவகைகளினால் நன்மை பெற்றவர்கள்
மன்னிய - பொருந்திவாழ்கிற
நாங்கூர் - திருநாங்கூரில்
தேன் ஆர் பொழில் சூழ் - தேன் நிறைந்த சோலைகளால் சூழப்பட்ட
திருவெள்ளக் குளத்துள் - திருவெள்ளக்குளத்தில் எழுந்தருளியிருக்கிற

 

விளக்க உரை

கானார் கரி – கம்ஸனுடைய யானை ராஜதானியில் வளர்ந்ததாயிருக்க, அதனைக் காட்டில் வளர்ந்ததாகச் சொல்லுவதற்குக் கருத்து யாதெனில்; காட்டில் வேண்டினபடி தினறு, வேண்டினபடி திரிந்து கொழுப்படைந்த யானைபோலே கொழுத்துக்கிடந்தது என்பதாம்.

English Translation

O Lord who pulled out the tusk of an elephant, Residing in Nangur with many learned ones! Nectared fruit orchards –Tiruvellakulam Lord! Elephant! Relieve me of my karmic misery.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்