விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மாற்றரசர் மணி முடியும் திறலும் தேசும்*  மற்று அவர்தம் காதலிமார் குழையும்*
    தந்தை  கால் தளையும் உடன் கழல வந்து தோன்றி*  கத நாகம் காத்து அளித்த கண்ணர் கண்டீர்*
    நூற்றிதழ் கொள் அரவிந்தம் நுழைந்த பள்ளத்து*  இளங் கமுகின் முது பாளை பகு வாய் நண்டின்* 
    சேற்று அளையில் வெண் முத்தம் சிந்தும் நாங்கூர்த்*  திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே. (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பள்ளத்து - தாழ்ந்த நிலத்தில் முளைத்துள்ள
நூறு இதழ் கொள் அரவிந்தம் நுழைந்த - பல இதழ்களையுடைய தாமரைப் பூவிலே பிரவேசித்த
பகு வாய் நண்டின் - விரிந்தவாயை யுடைத்தான நண்டினுடைய
சேறு அளையில் - சேறுமிக்க விளையிலே
இள கமுகின் முது பாளை - இளைய பாக்கு மரங்களினுடைய முற்றின பாளையானது

விளக்க உரை

(நூற்றிதழ்கொள் இத்யாதி.) வடமொழியில் தாமரைக்கு ‘சதபத்ரம்’ என்றொரு பெயர் உண்டாதலால் அதற்கு இணங்கிய விசேஷணமாம் இது. நண்டுகள் உணவுக்காகத் தாமரைப் பூவிலே சென்று புகுவதுண்டு; அங்ஙனம் போயிருக்கும் போது அந்த நண்டின் வளையில் பாக்குப் பாளைகளினின்று வெண்முத்துக்கள் இறைக்கப்பட்டு வளை மூடப்படுகின்றதாம் திருநாங்கூரில்.

English Translation

See, the Lord, saviour of the elephant, who took birth as Krishna rand; felled the crowns of enemy kings; - their strength, their glory, and their "Wives" jewels two fell; the fetters on his father's feet also fell, is my Senkanmai who resides of Nangur, -where the male pincer-crabs enter the hundred-petalled lotus blooms in water tanks and Areco trees spill pearls of flower buds, -in his temple of Tirutetri Ambalam.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்