விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    'தீமனத்து அரக்கர் திறலழித்தவனே!' என்று சென்று அடைந்தவர் தமக்குத்* 
    தாய்மனத்து இரங்கி அருளினைக் கொடுக்கும்*  தயரதன் மதலையை சயமே*
    தேமலர்ப் பொழில் சூழ் நாங்கை நல் நடுவுள்*  செம்பொன்செய்கோயிலினுள்ளே* 
    காமனைப் பயந்தான் தன்னை நான் அடியேன்*  கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

சென்று அடைந்தவர் தமக்கு - வந்து கிட்டினவர்கள் விஷயத்தில்
தாய் மனத்து இரங்கி அருளினை கொடுக்கும் - தாய்போலே கரைந்து கிருபை பண்ணுகின்ற
தயரதன் மதலையை - தசரத புத்ரனானவனும்
காமனை பயந்தான் தன்னை - ப்ரத்யும்நனைப் படைத்தவனுமான பெருமானை
சயம் மே - ஜயசப்தங்கள் பொருந்தியிருக்கப் பெற்றதும்

விளக்க உரை

சயமெ – ‘ஸ்வயம்’ என்ற வடசொல்லும் சயமெனத் திரியும், ‘ஜயம்’ என்ற வடசொல்லும் சயமெனத் திரியும்; சயம் மே - ஸ்வயமாகவே வந்து மேவியிருக்கப் பெற்ற தலம். (அன்றியே) ‘ஜய விஜயீ பவ’ என்று பல்லாண்டுபாடும்படியான ஜயசப்தங்கள் மேவப்பெற்ற என்னவுமாம். இனி, என்னும் வடசொல் ஸமூஹமென்னும் பொருள் கொண்டதாதலால் அதுவே இங்குச் சயமெனத் திரிந்ததாகக்கொண்டு ‘ஸமூஹமான தேமலர்ப் பொழிலையுடைய’ என்று முரைப்பர். வாமனைப் பயந்தான்றன்னை – கண்ணபிரான் ருக்மிணிப்பிராட்டியிடத்தில் மந்மதனுடைய அம்சமான ப்ரத்யும்நனைப்பெற்ற வரலாறு அறிக

English Translation

"O Mighty strong-Lord, Vanquisher of Aurasi" those who woilld offer worship thus, He with a motherly heart of compasssion graces as Dasaratha's mighty son. Honey-dripping flower groves all around Nangur, -Semponsei Koyil is in their midst seeing my good Lord, Kamanar's father, I have found my spiritual elevation.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்